Monday, September 27, 2021
Home Technology Tech News மால்வேர் அடங்கிய செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து அதரிடியாக நீக்கிய கூகுள்

மால்வேர் அடங்கிய செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து அதரிடியாக நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனம் மால்வேர் அடங்கிய ஆறு செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஜோக்கர் என அழைக்கப்படும் இந்த மால்வேர் முன்னதாக ஜூலை மாத வாக்கில் 11 செயலிகளில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் பிரேடியோ எனும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் இந்த மால்வேரை கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது. மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகளை சுமார் 2 லட்சம் டவுன்லோட்களை கடந்துள்ளது.

ஜோக்கர் என்ற மால்வேர் பிலீஸ்வேர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாட் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மால்வேர் மொபைல்களில் தேவையற்ற க்்ளிக்களை மேற்கொண்டு கட்டணம் வசூலிக்கும் பிரீமியம் சேவைகளில் சேர்க்கும் தன்மை கொண்டது.

இது மிக சிறிய குறியீடுகளை கொண்டு ரகசியமாக மறைந்து இருந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இதை கண்டறிவது மிகவும் கடினமான காரியம் ஆகும்.

சேஃப்டி ஆப்லாக், கன்வீனியன்ட் ஸ்கேனர் 2, புஷ் மெசேஜ் – டெக்ஸ்டிங் மற்றும் எஸ்எம்எஸ், எமோஜி வால்பேப்பர், செப்பரேட் டாக் ஸ்கேனர் மற்றும் ஃபிங்கர்பிட் கேம்பாக்ஸ் என்ற செயலிகளில் ஜோக்கர் மால்வேர் கொண்டிருந்ததால், பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த செயலிகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் இவற்றை அன்-இன்ஸ்டால் செய்வதே சிறந்தது என பிரேடியோ அறிவுறுத்தி உள்ளது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments