Friday, January 28, 2022
HomeTechnologyHow Toஉங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் உள்ள அந்த தகவல்களை இயக்குவது எப்படி?

உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் உள்ள அந்த தகவல்களை இயக்குவது எப்படி?

கூகுள் நிறுவன சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவோர் எனில், நிச்சயம் நீங்கள் சமீபத்தில் சென்று வந்த இடங்களின் விவரங்களை கூகுள் தனது சர்வெர்களில் சேமித்து வைத்திருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் தனது சேவைகளை மேம்படுத்த முடிகிறது என கூகுள் தெரிவித்து வருகிறது.

பயனர்களின் லொகேஷன் விவரங்களை சேகரித்து வந்தாலும் இவற்றை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இயக்கவும், அழிக்கவும் கூகுள் வசதியை வழங்கி உள்ளது. பயனர்கள் தங்களது சாதனத்தில் கூகுள் அக்கவுண்ட் சைன் இன் செய்து, லொகேஷன் சேவைகளை ஆன் செய்தால் மட்டுமே கூகுள் அவற்றை தனது சர்வெர்களில் சேமித்து வைக்கிறது.

கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்துவோர் எப்போது வேண்டுமானாலும் லொகேஷன் ரிப்போர்ட்டிங் செட்டிங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வழி செய்கிறது.

மேலும் பயனர்கள் தங்களது சாதனங்களில் லொகேஷன் ஹிஸ்ட்ரி அம்சத்தை ஆஃப் செய்து கொள்ளும் வசதியை கூகுள் வழங்குகிறது. இத்துடன் லொகேஷன் ஹிஸ்ட்ரி விவரங்களை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தானாக அழிந்து போக செய்யும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

கூகுள் லொகேஷன் ஹிஸ்ட்ரியை டெலீட் செய்வது எப்படி?

1 – கணினியில் பிரவுசரை ஓபன் செய்ய வேண்டும்

2 – பின் https://myaccount.google.com/ எனும் இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்

3 – கூகுள் அக்கவுண்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்

4 – இனி டேட்டா மற்றும் பெர்சனலைசேஷன் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

5 – ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் அம்சத்தை இயக்க கீழ்புறமாக ஸ்கிரால் செய்ய வேண்டும்

6 – லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

7 – மேனேஜ் ஆக்டிவிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

8 – டிராஷ் ஐகானை க்ளிக் செய்து அனைத்து விதமான லொகேஷன் ஹிஸ்ட்ரியையும் டெலீட் செய்ய வேண்டும்

லொகேஷன் ஹிஸ்ட்ரியை தானாக அழிந்து போக செய்வது எப்படி?

1 – கணினியில் பிரவுசரை ஓபன் செய்ய வேண்டும்

2 – இனி https://myaccount.google.com/ எனும் இணைய முகரிக்கு செல்ல வேண்டும்

3 – கூகுள் அக்கவுண்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்

4 – இனி டேட்டா மற்றும் பெர்சனலைசேஷன் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

5 – ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் அம்சத்தை இயக்க கீழ்புறமாக ஸ்கிரால் செய்ய வேண்டும்

6 – லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

7 – ஆட்டோ டெலீட் அம்சத்தை இயக்க வேண்டும்

இந்த அம்சத்தில் மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படும். இவற்றில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்

8 – மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்

இவ்வாறு செய்ததும் உங்களது விருப்பம் அப்டேட் செய்யப்பட்டு, லொகேஷன் ஹிஸ்ட்ரி தானாக அழிக்கப்படும்

லொகேஷன் ஹிஸ்ட்ரியை ஆஃப் / பாஸ் செய்வது எப்படி?

1 – கணினியில் பிரவுசரை ஓபன் செய்ய வேண்டும்

2 – இனி https://myaccount.google.com/ எனும் இணைய முகரிக்கு செல்ல வேண்டும்

3 – கூகுள் அக்கவுண்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்

4 – இனி டேட்டா மற்றும் பெர்சனலைசேஷன் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

5 – ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் அம்சத்தை இயக்க கீழ்புறமாக ஸ்கிரால் செய்ய வேண்டும்

6 – லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

7 – லொகேஷன் ஹிஸ்ட்ரி பட்டனை ஆஃப் செய்தால், உங்களின் லொகேஷன் ஹிஸ்ட்ரி பாஸ் செய்யப்பட்டு விடும்

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டு உள்ள வழிமுறைகள் கூகுள் மேப்ஸ் உங்களது லொகேஷன் விவரங்களை சேமிப்பதையும் நிறுத்தி விடும். கூகுள் டிராக்கிங் செய்வது நிறுத்த லொகேஷன் சேவைகளை ஆஃப் செய்யலாம். எனினும், இவ்வாறு செய்யும் போது லொகேஷன் டேட்டா விவரங்களை சார்ந்து இயங்கும் சில செயலிகள் சீராக இயங்காமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன.

- Advertisment -

Most Popular

Recent Comments