இந்தியாவில் டிஜிட்டல் யுகம் தொடங்கிவிட்டதால் இணையதள பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் இணையத்தை மையப்படுத்தியே ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அப்படி இருந்தும் பலருக்கும் இணையம் போதிய வேகத்தில் இல்லை.
இணையத்தின் வேகத்தை எவ்வாறு அதிகரிக்க கீழே உள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள்.
வீடியோ தரம்:
நீங்கள் ஏதாவது வீடியோ பார்த்தால் முடிந்த அளவிற்கு AUTO மோடில் பார்க்கவும். இதனால் தானாகவே உங்களின் இணைய வேகத்திற்கு ஏற்றார் போல உங்களின் வீடியோ தரம் மாறிக்கொள்ளும். அதிகப்படியான தரம் அதிகப்படியான டேட்டா உறிஞ்சும்.
தேவையில்லாத Tab மூடவும்:
உங்களுக்கு தேவையில்லாத Tab பலவற்றை மூடுவதால் உங்களின் இணைய வேகம் அதிகரிக்கும்.
Lite வெர்ஷன் browser பயன்படுத்தலாம்:
நாம் தினசரி பயன்படுத்தும் வெப் பிரௌசர் அதிகப்படியான ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். அதில் வசதிகளும் அதிகம். இதனால் அதற்கு தேவையான இணைய வசதியும் அதிகமாக இருக்கும். இப்படி அதிக வசதிகள் உள்ள Browser நமக்கு தேவை இல்லை என்றால் Chrome Lite, Opera Mini, Firefox Lite போன்ற குறைவான ஸ்டோரேஜ் கொண்ட Browser பயன்படுத்துவதால் உங்களின் இணைய வேகம் அதிகரிக்கும்.
Wifi Router அருகே செல்லவும்:
உங்களின் வீட்டில் Wifi இருந்தால் அதன் அருகில் சென்று இணையத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு அதிகப்படியான வேகம் கிடைக்கும். குறைவான சிக்னல் கிடைக்கும் இடத்தில் பயன்படுத்தினால் உங்களுக்கு சரியான வேகம் கிடைக்காது.
குறைவான பயன்பாடு:
நீங்கள் உங்களின் Wifi Router மூலம் அதிகப்படியான எலக்ட்ரானிக் பொருட்களை கனெக்ட் செய்திருந்தால் கூட உங்களுக்கு இணைய வேகம் மிகவும் குறைவாக கிடைக்கும். இதனால் தேவையில்லாத கனெக்ஷன் கட் செய்வது சிறந்தது.