பப்ஜி கார்ப்பரேஷன் தனது பப்ஜி மொபைல் பிரான்சைஸ்-ஐ டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற முசவி செய்துள்ளது. முன்னதாக மத்திய அரசு பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் பப்ஜி மொபைல் தவிர பப்ஜி மொபைல் லைட் மற்றும் 116 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வெளியானதும், டென்சென்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தது.
Also Read: FAU-G: பப்ஜி மொபைலுக்கு மாற்றாக விரைவில் வெளியாகும் இந்திய கேம்
இந்நிலையில், பப்ஜி கேமினை உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் தனது கேமிற்தான உரிமத்தை டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பப்ஜி கார்ப்பரேஷன், இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கான உரிமத்தை பெற்றுக் கொள்ளும்.
பப்ஜி கார்ப்பரேஷன் தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் கேம் யூனின் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தான் கணினி மற்றும் கன்சோல் கேமர்களுக்கான பப்ஜியை உருவாக்கி, வெளியிட்டது. எனினும், பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் கேம்கள் பப்ஜி கார்ப்பரேஷன் மற்றும் டென்சென்ட் கேம்ஸ் இணைந்து உருவாக்கின.