Tuesday, March 28, 2023
HomeTechnologyTech Newsபார்க்க முகக்கவசம் ஆனால் ஏர் பியூரிஃபையர்- அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்த எல்ஜி

பார்க்க முகக்கவசம் ஆனால் ஏர் பியூரிஃபையர்- அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்த எல்ஜி

உலகம் முழுக்க முகக்கவசம் அணிதல் அத்தியாசியமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், எல்ஜி நிறுவனம் அணியக்கூடிய ஏர் பியூரிஃபையரை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி நிறுவனத்தின் புதிய ஏர் பியூரிஃபையர் பார்க்க முகக்கவசம் போன்றே காட்சியளிப்பதோடு, முகக்கவசமாகவே அணிந்து கொள்ளவும் முடியும்.

தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் எல்ஜியின் புதிய ஏர் பியூரிஃபையர் 2020 நான்காவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியக்கூடிய ஏர் பியூரிஃபையரில் மாற்றக்கூடிய இரண்டு H13 HEPA ஃபில்ட்டர்களை கொண்டுள்ளது.

இதே ஃபில்ட்டர்கள் எல்ஜியின் ஏர் பியூரிஃபையர் சாதனங்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஏர் பியூரிஃபையர்கள் பயனர்களின் முகத்தில் கச்சிதமாக பொருந்தி கொள்கின்றன. மேலும் இவை காற்று நேரடியாக பயனர் சுவாச குழாயினுள் செல்ல விடாமல் தடுக்கிறது.

எல்ஜி பியூரிகேர் வியரபிள் ஏர் பியூரிஃபையர் நீண்ட நேரம் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனுடன் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது பயனர்கள் எப்போது ஃபில்ட்டர்களை மாற்ற வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.

மேலும் இந்த ஏர் பியூரிஃபையரில் 820mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது லோ மோடில் 8 மணி நேரத்திற்கும், ஹை மோடில் 2 மணி நேரத்திற்கும் பயன்படுத்த வழி செய்கிறது.

இரண்டு ஃபேன்கள், பேடென்ட் செய்யப்பட்ட ரெஸ்பிரேட்டரி சென்சார் கொண்டுள்ளதால், இது அணிபவர் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் இந்த ஏர் பியூரிஃபையர் பயனரின் மூச்சு காற்று வேகத்திற்கு ஏற்ப ஃபேன்களின் வேகத்தை மூன்று நிலைகளில் இயங்க செய்கிறது. இது தானாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் இதில் யுவி-எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த லைட்கள் ஏர் பியூரிஃபையர் சார்ஜ் செய்யும் போது கிருமிகளை கொன்று குவிக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும். இதில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாகங்களையும் பயனர்கள் மாற்றிக் கொள்ளவும், மீண்டும் பயன்படுத்தவும் முடியும் என எல்ஜி தெரிவித்து இருக்கிறது.