பயனர்களின் பணம், எஸ்எம்எஸ் மற்றும் காண்டாக்ட் லிஸ்ட் போன்ற தனிப்பட்ட விவரங்களை திருடும் தன்மை கொண்ட 17 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான இசட்ஸ்கேலர் வெளியிட்ட தகவல்களை தொடர்ந்து கூகுள் மால்வேர் அடங்கிய செயலிகளை நீக்கி இருக்கிறது. 17 செயலிகளில் ஜோக்கர் எனும் மால்வேர் இடம்பெற்று இருக்கிறது. நீக்கப்பட்ட செயலிகள் ஒவ்வொன்றும் சுமார் 1.2 லட்சம் டவுன்லோட்களை பெற்று இருந்தது.
தற்சமயம் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட செயலிகள் பிடிஎப் ஸ்கேனர்கள், மெசன்ஜர்கள், டிரான்ஸ்லேட்டர், ஆப் லாக் மற்றும் கொலாஜ் மேக்கர் உள்ளிட்டவை அடங்கும்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன், அவற்றுக்கு மற்ற பயனர்கள் கொடுத்திருக்கும் கமென்ட்கள் மற்றும் ரிவ்யூக்களை படிக்க வேண்டும். மேலும், செயலி சார்பில் கேட்கப்படும் அனுமதிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளர்.