தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் அள்ளித்தரும் பொக்கிஷமாக செல்போன் மாறியுள்ளது. அதற்கேற்றார்போல பெரிய திரைகளுடன் பல்வேறு அம்சங்களுடன் செல்போன்கள் வந்துள்ளது.
பெரிய திரைகள் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் ஒற்றைக் கையில் செல்போனில் டைப் செய்ய முடியவில்லை என்ற கவலை பலருக்கும் இருந்து கொண்டே இருக்கும். அதற்கான தீர்வைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்,
• உங்களுடைய ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் 12 அல்லது அதற்கு பிறகு வந்த அப்டேட் வெர்ஷனாக இருந்தால் போதும்.
• ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் செட்டிங்சில் ஒன் ஹேண்டட் மோட் (One Handed Mode) என்று வசதி இருக்கும்.
ஆக்டிவேட் செய்வது எப்படி?
• ஸ்மார்ட் போனில் டைப் செய்யக்கூடிய ஏதேனும் ஒரு ஆப்பை திறந்து கொள்ளுங்கள்.
• பிறகு கீபோர்டில் காணப்படும் மூன்று புள்ளி ஐக்கானை கிளிக் செய்யவும்.
• இப்பொழுது அங்கு காட்டப்படும் தேர்வுகளில் ஒன் ஹேண்டட் (One Handed) விருப்பத்தை தேர்வு செய்யவும்.
• இடது கை பழக்கமுடையவர் என்றால் இடது புறத்தில் இருக்கும் ஏரோவை தேர்வு செய்யவும்.
• வலது கை பழக்கமுடையவர் என்றால் வலது புறத்தில் இருக்கும் ஏரோவை தேர்வு செய்யவும்.
• உங்களுடைய கீபோர்டை பெரியதாக்க வேண்டும் என்றால் நான்கு பக்க ஏரோவை கிளிக் செய்ய வேண்டும்.
இதே போல் மற்றொரு முறைப்படியும் உங்களுடைய போனில் ஒற்றை கை மெசேஜ் டைப்பிங் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.
இதற்கு போனின் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு காண்பிக்கப்படும் கெஸ்டர் ஆப்ஷனை (Gesture Option) தேர்வு செய்ய வேண்டும். அதன் கீழ் இருக்கும் ஒன் ஹேண்டட் மோட் (One Handed Mode) விருப்பத்தை தேர்வு செய்யவும். இப்போது மொபைல் கீ போர்டு சிறயதாகிவிடும். விரல் அளவிற்கு ஏற்றார் போல இந்த கீபோர்டை பிளேஸ் செய்து ஈசியாக டைப் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி உங்கள் கீ போர்டை பெரியதாகவும், சிறியதாகவும் மாற்றிக் கொள்ளலாம்.