கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஒன் செயலி பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. கூகுள் ஒன் சந்தா முறை சேவையில் பயனர்கள் கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்த முடியும்.
பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த சமீபத்திய செயலியாக கூகுள் ஒன் இருக்கிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஒன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி கூகுள் பல்வேறு இதர செயலிகளை ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.
ஒப்போ, ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெசேஜஸ் மற்றும் போன் ஆப்ஸ் உள்ளிட்டவைகளை டீபால்ட் செயலியாக வழங்கி வருகின்றன.
கூகுள் ஒன் செயலியின் முதன்மை நோக்கம் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவது தான். இதுதவிர கூகுள் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் பேமிலி ஷேரிங் உள்ளிட்டவைகளுக்கான வசதியும் இந்த செயலியில் கிடைக்கிறது. சமீபத்தில் கூகுள் ஒன் சேவையில் விபிஎன் (VPN) சேவையும் இணைக்கப்பட்டது.
இதில் 2 டிபி அதாவது 2000 ஜிபி பிளான் விலை 9.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது அமெரிக்காவில் வசிக்கும் கூகுள் ஒன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதே சேவையில் ப்ரோ செஷன்களையும் கூகுள் வழங்குகிறது. இதில் கூகுள் ஒன் சந்தாதாரர்கள் நேரடியாக கூகுள் வல்லுநர்களுடன் தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட முடியும்.