Tuesday, March 28, 2023
HomeTechnologyTech Newsநிமிடத்திற்கு 110 ஆர்டர்கள் - 1 கோடி பொருட்கள் விநியோகம் - மாஸ் வரவேற்பு பெற்ற...

நிமிடத்திற்கு 110 ஆர்டர்கள் – 1 கோடி பொருட்கள் விநியோகம் – மாஸ் வரவேற்பு பெற்ற ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 21 வரை நடைபெற்றது. சிறப்பு விற்பனையில் அமோக வரவேற்பு கிடைத்ததாக ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது.

சிறப்பு விற்பனை காலக்கட்டத்தில் மொத்தம் 66 கோடி விசிட்கள் ப்ளிப்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 52 சதவீதம் பேர் மூன்றாம் அடுக்கு நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர். விற்பனை காலக்கட்டத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிக டெலிவரிக்கள் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 20 மடங்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது. அமோக விற்பனையில் நுகர்வோர் மின்சாதனங்கள் மற்றும் பேஷன் பொருட்கள் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன. ப்ளிப்கார்ட் தளத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 3.2 மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் பேர் எக்சேன்ஜ் செய்துள்ளனர். மேலும் வங்கி சார்ந்த சலுகைகளை 46 சதவீதம் பேர் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் ஒட்டுமொத்த அளவில் டிஜிட்டல் பேமண்ட் வசதியை பயன்படுத்தியவோர் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.6 மடங்கு அதிகம் ஆகும்.