Saturday, March 25, 2023
HomeTechnologyHow Toஜியோமீட் செயலியில் வீடியோ பேக்கிரவுண்டை மாற்றுவது எப்படி?

ஜியோமீட் செயலியில் வீடியோ பேக்கிரவுண்டை மாற்றுவது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையை ஜியோமீட் எனும் பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோமீட் ஜூம் மற்றும் இதர வீடியோ கால் செயலிகளுக்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது.

ஜியோமீட் செயலியை கொண்டு க்ரூப் கால்களில் அதிகபட்சம் 100 பேருடன் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கு வீடியோ கால் பேச முடியும். ஜூம் செயலியில் ஒருவர் மற்றொருவருடனும், க்ரூப் மீட்டிங்களில் அதிகபட்சம் மூன்று பேரில் துவங்கி 100 பேருடன் இலவசமாக 40 நிமிடங்களுக்கு வீடியோ கால் பேசலாம்.

ஜூம் சேவையுடன் ஒப்பிடும் போது ஜியோமீட் சேவையும் ஒரேமாதிரி அனுபவத்தை வழங்குகிறது. ஜியோமீட் செயலியில் மீட்டிங்களை முன்கூட்டியே ஷெட்யூல் செய்யும் வசதி, மீட்டிங்களை கடவுச்சொல் கொண்டு பாதுகாப்பது மற்றும் வெயிட்டிங் ரூம் உருவாக்குவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஜியோமீட் செயலியில் வீடியோ கால் தரம் 720 பிக்சல்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஜியோமீட் செயலியில் இன்புட் கேமராவை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் மூன்றாம் தரப்பு கேமரா செயலிகளை பயன்படுத்த முடியும். ஜூம் செயலியிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எனினும், பேக்கிரவுண்ட்டை மாற்றுவதற்கு ஜூம் செயலி சிறப்பான வசதியை வழங்குகிறது. ஜூம் செயலியில் கம்ப்யூட்டரில் உள்ள புகைப்படங்களை பேக்கிரவுண்டாக மாற்றும் வசதியை வழங்குகிறது. ஜியோமீட் சேவையில் பேக்கிரவுண்டை மாற்ற கேமரா சோர்சை மாற்றி, பின் விரும்பும் பேக்கிரவுண்டை தேர்வு செய்ய வேண்டும்.

தற்சமயம் ஜியோமீட் இன்டர்பேஸ் அத்தனை சிறப்பாக இல்லை. சமயங்களில் இந்த அம்சம் இயங்காமல் போகும் வாய்ப்புகளும் அதிகமே.

எனினும், இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

1. முதலில் விண்டோஸ் 10 அல்லது மேக் ஒஎஸ் கம்ப்யூட்டர்களில் ஸ்னாப் கேமரா செயலியை “snapcamera.snapchat.com” வலைதளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்

2. ஸ்னாப் கேமராவை இன்ஸ்டால் செய்ததும், செயலியை திறக்க வேண்டும்

3. லென்ஸ் சர்ச் பாக்ஸ் ஆப்ஷனில் விரும்பிய பேக்கிரவுண்டை தேர்வு செய்ய வேண்டும்

4. ஸ்னாப் கேமராவை பின்னணியில் இயங்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்

5. ஜியோமீட் செயலியை திறந்து மீட்டிங்கை துவங்கலாம்

6. ஜியோமீட் செயலியின் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து வீடியோவின் கீழ் ஸ்னாப் கேமராவை தேர்வு செய்யவும்

7. வீடியோ சோர்சை மாற்றுவதன் மூலம் ஸ்னாப் கேமரா அவுட்புட்டை ஒளிபரப்ப முடியும்.