கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக வீடியோ கால் சேவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்து உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பல முன்னணி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை இன்னும் சில மாதங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளன.
இவ்வாறு வீட்டில் இருந்துகொண்டே பணியாற்றுவோர் நிச்சயம் பலமுறை வீடியோ கால் பேச வேண்டிய அவசியம் ஏற்படும். இவ்வாறான சூழலில் வீடியோ கால் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் போது பலர் தங்களது அறையை அவசர அவசரமாக சுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த அவல நிலையை போக்கும் விதமாக பல்வேறு வீடியோ கால் சேவை வழங்கும் நிறுவனங்கள் செயற்கையாக பேக்கிரவுண்ட் ஒன்றை சேர்க்கும் வசதியை வழங்கி வருகின்றன. இவ்வாறு கஸ்டம் பேக்கிரவுண்ட் செட் செய்ய எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
தற்சமயம் கஸ்டம் அல்லது விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் ஜூம், ஸ்கைப் மற்றும் டீம்ஸ் சேவையில் வழங்கப்பட்டு உள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஜூம் செயலியில் பேக்கிரவுண்ட் மாற்றுவது எப்படி?
1. ஜூம் செயலியை திறந்து லாக் இன் செய்ய வேண்டும்
2. செட்டிங்ஸ் ஆப்ஷனில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3. இந்த பக்கத்தின் கீழ் பகுதியில் உங்களிடம் பச்சை நிற ஸ்கிரீன் உள்ளதா, இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும்
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் கஸ்டம் பேக்கிரவுண்டை தேர்வு செய்ய வேண்டும்
5. இதன் பின் தேர்வு செய்த பேக்கிரவுண்டில் வீடியோ கால் பேச துவங்கலாம்
ஸ்கைப் சேவையில் பேக்கிரவுண்டு மாற்றுவது எப்படி?
1. ஸ்கைப் செயலியை திறந்து ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்யவும்
2. செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஆடியோ மற்றும் வீடியோ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3. இங்கு பேக்கிரவுண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து நீங்கள் செட் செய்ய விரும்பும் பேக்கிரவுண்டை தேர்வு செய்யவும்
டீம்ஸ் சேவையில் பேக்கிரவுண்டை மாற்றுவது எப்படி?
ஆடியோ அல்லது வீடியோ கால் செட்டப் செய்ய துவங்கும் முன் பேக்கிரவுண்ட் எஃபெக்ட்ஸ் டேபை க்ளிக் செய்து வலதுபுறத்தில் உள்ள ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். இங்கு புதிய பேக்கிரவுண்டை தேர்வு செய்வது மட்டுமின்றி பேக்கிரவுண்ட் ஆப்ஷனை தேர்வு செய்து அதனை பிலர் செய்யலாம்.
மீட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போதும் பேக்கிரவுண்டை மாற்றிக் கொள்ளும் வசதியை டீம்ஸ் வழங்குகிறது. இதை செய்ய மோர் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து ஷோ பேக்கிரவுண்ட் எஃபெக்ட்ஸ் ஆப்ஷனில் பேக்கிரவுண்டை தேர்வு செய்யலாம்.