வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 50 ஆயிரம் மளிகை வியாபாரம் செய்யும் கடைகளை தனது தளத்தில் இணைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் விநியோக திறன் மற்றும் தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 50 ஆயிரம் கடைகளுடன், ப்ளிப்கார்ட் தனித்தும் மிக்க சேவையை அதிவேகமாக தனது பயனர்களுக்கு வழங்கும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இத்துடன் மளிகை வியாபாரம் மேலும் அதிகரிப்பதோடு, அவர்களின் டிஜிட்டல் திறன் மேம்படும்.
பண்டிகை கால விற்பனை மற்றும் பிக் பில்லியன் டேஸ் சேல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தியா முழுக்க சுமார் 850-க்கும் அதிகமான நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய ப்ளிப்கார்ட் மளிகை வியாபாரங்களை தனது தளத்தில் சேர்த்துள்ளது.
இந்தியாவில் ப்ளிப்கார்ட் போட்டியாளரான அமேசான் செப்டம்பர் மாதத்திலேயே ஹேப்பி சேவிங்ஸ் டேஸ் எனும் சிறப்பு சலுகை விற்பனையை நடத்த இருக்கிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
அமேசானின் ஹேப்பி சேவிங்ஸ் டேஸ் விற்பனை செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அமேசானில் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.