இந்திய கிரிக்கெட் அணி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது விராட்கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சாதனைகள் மேல் சாதனைகளை படைத்து தான் ஒரு லெஜண்ட் என்று நிரூபித்தவர். ராஜகவர் டிரைவ் ஆடும் அவரை கிங் கோலி என்றும், ரன்மெஷின் என்றும் ரசிகர்கள் அழைப்பதன் மூலமே அவரது பேட்டிங் திறமையை நாம் அறிய முடியும்.
2 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்காமல் தடுமாறி வந்த விராட்கோலி கடந்தாண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து ஒரு அற்புதமான கம்பேக் அளித்தார். அடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார். பழைய கோலியாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மீண்டு வந்த விராட், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இன்னும் தனது கம்பேக்கை அளிக்காமலே உள்ளார்.
விராட்கோலி கடைசியாக ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் அதாவது 20 இன்னிங்சில் அவரது ஸ்கோரை கீழே காணலாம்.
- 55 ரன்கள்
- 50 ரன்கள்
- 44 ரன்கள்
- 0
- 35 ரன்கள்
- 18 ரன்கள்
- 79 ரன்கள்
- 45 ரன்கள்
- 23 ரன்கள்
- 13 ரன்கள்
- 11 ரன்கள்
- 20 ரன்கள்
- 1 ரன்
- 19 ரன்கள்
- 24 ரன்கள்
- 1 ரன்
- 12 ரன்கள்
- 44 ரன்கள்
- 20 ரன்கள்
- 22 ரன்கள்
விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்தே 13 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டது. எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் இப்படி அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறுவது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனி ஆளாக ஆட்டத்தையே மாற்றும் தன்மை கொண்ட விராட்கோலி எப்போது சதம் அடித்து தனது கம்பேக்கை தருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நாமும் அவரது ராஜகம்பேக்கிற்காக காத்திருப்போம்.
ALSO READ | கபில்தேவ் வரிசையில் இணைந்த ஜடேஜா..! இதுவரை 2 இந்தியர்கள் மட்டுமே படைத்துள்ள சாதனை…!