இந்தியா –நியூசிலாந்து அணிகள் இன்று ஹைதரபாத்தில் மோதிக் கொண்டிருக்கும் ஒருநாள் போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன்கில் பலமிகுந்த நியசிலாந்தின் பந்துவீச்சை சமாளித்து இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்த இரட்டை சதம் மூலமாக ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றிலே மிக இளம் வயதிலே இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற புதிய வரலாறை சுப்மன்கில் படைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த 8வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன்முதலாக இரட்டை சதம் விளாசிய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இதுவரை ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வீரர்கள் யார்..? யார்..? என்பதை கீழே விரிவாக காணலாம்.
• சச்சின் டெண்டுல்கர் – 200 (தெ.ஆ.எதிராக) – 2010
• வீரேந்திர சேவாக் – 219 (வெ. இண்டீஸ்) -2011
• ரோகித் சர்மா – 209 (ஆஸ்திரேலியா) – 2013
• ரோகித்சர்மா -264 ( இலங்கை) – 2014
• மார்டின் கப்தில் – 237 ( வெ. இண்டீஸ்) – 2015
• கிறிஸ் கெயில் – 215 ( ஜிம்பாப்வே) – 2015
• ரோகித் சர்மா – 208 ( ஆஸ்திரேலியா) – 2017
• பக்கர் ஜமான் – 201 ( ஜிம்பாப்வே) – 2018
• இஷான்கிஷான் – 210 (வங்காளதேசம்) – 2022
• சுப்மன்கில் – 208 ( நியூசிலாந்து) – 2023
இந்த பட்டியல் வருங்காலங்களில் இன்னும் பெரியதாக அமைய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.