Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச தொடர்.. ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா.. அட்டவணை வெளியீடு

கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச தொடர்.. ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா.. அட்டவணை வெளியீடு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடர் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதத்திற்கு பிறகு இந்திய அணி சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளதையடுத்து ரசிகர்கள் இப்போதே இந்த போட்டிகளை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் லாக்டவுன் மற்றும் பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக அணைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் கிரிக்கெட் தொடர்களும் தப்பவில்லை.பல்வேறு சர்வதேச தொடர்களும் கைதுசெய்யப்பட்டது மேலும் ஐசிசி டி 20 உலகக்கோப்பை தொடரும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதையடுத்து படிப்படியாக மீண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளன. ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் ஐபிஎல் தொடங்கிவிட்டதால் இந்திய அணி சர்வதேச தொடர்கள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான் இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.

ஒருநாள் தொடர் :
முதல் போட்டி – நவம்பர் 27 (சிட்னி மைதானம் )
இரண்டாவது போட்டி – நவம்பர் 29 (சிட்னி மைதானம் )
மூன்றாவது போட்டி – டிசம்பர் 1 (மனுகா ஓவல் மைதானம்)

டி20 தொடர் :
முதல் போட்டி – டிசம்பர் 4 (மனுகா ஓவல் மைதானம்)
இரண்டாவது போட்டி – டிசம்பர் 6 (சிட்னி மைதானம் )
மூன்றாவது போட்டி – டிசம்பர் 8 (சிட்னி மைதானம் )

டெஸ்ட் தொடர் :
முதல் போட்டி – டிசம்பர் 17 முதல் 21 வரை (அடிலெய்டு ஓவல் மைதானம்)
இரண்டாவது போட்டி – டிசம்பர் 26 முதல் 31 வரை ( மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் )
மூன்றாவது போட்டி – ஜனவரி 7 முதல் 11 வரை (சிட்னி மைதானம் )
நான்காவது போட்டி – ஜனவரி 15 முதல் 19 வரை (பிரிஸ்பேன் மைதானம்)

இதில் முதல் டெஸ்ட் போட்டி மட்டும் பகலிரவு போட்டிகளாக நடைபெறும். மேலும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகளை நடத்த முடியவில்லை என்றால் இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளும் சிட்னியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.