Thursday, June 1, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்நியூசிலாந்தை மிரட்டுமா இந்தியா..? வெற்றியுடன் தொடங்கப்போவது யார்..? இன்று முதல் போட்டி...!

நியூசிலாந்தை மிரட்டுமா இந்தியா..? வெற்றியுடன் தொடங்கப்போவது யார்..? இன்று முதல் போட்டி…!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டியில் ஆட உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் களமிறங்கும் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது.

வில்லியம்சன் இல்லாததால் டாம் லாதம் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. டாம் லாதம் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, நிகோலஸ், மிட்செல், பெர்குசன், சோதி, சான்ட்னர் ஆகியோருக்கு இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக ஆடிய அனுபவம் உள்ளது. இதனால், நாளை இவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.

இந்திய அணி மீண்டும் தனது அசுர பலத்திற்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக விராட்கோலி உள்ளார். இளம் வீரர் சுப்மன்கில்லும், ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கம் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக படிதார் அல்லது கே.எஸ்.பரத் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணிக்கு பலமாக லாதம், ஆலன், கான்வே, மிட்செல் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நாளைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பலாம். சுழலில் குல்தீப், சாஹல் மிரட்ட வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணிக்கு சுழலில் சான்ட்னர் மிரட்ட வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் ஹைதரபாத்தில் ராஜீவ்காந்தி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு மோதுகின்றனர்.