Tuesday, June 28, 2022
Homeவிளையாட்டு செய்திகள்கிரிக்கெட் செய்திகள்புது ஜெர்சியில் வரும் ஆஸ்திரேலியா.. ரெட்ரோவில் அசத்த இருக்கும் இந்திய அணி.. வெளியான தகவல்

புது ஜெர்சியில் வரும் ஆஸ்திரேலியா.. ரெட்ரோவில் அசத்த இருக்கும் இந்திய அணி.. வெளியான தகவல்

சிட்னி : இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்திய அணியும் குறைந்த ஓவர் போட்டிகளில் பழைய ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் முடிவடைந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து இந்திய அணி பங்கேற்க இருக்கும் முதல் சர்வதேச தொடர் என்பதால் இந்த தொடர் மீதான எதிர்ப்பு அதிகமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் 27ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான தொடரில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய அணி குறைந்த ஓவர் போட்டிகளின் போது புதிய ஜெர்சியுடன் களமிறங்குவர் என்றும் அந்த ஜெர்சியில் இருக்கும் படங்களுக்கான விளக்கங்களும் வெளியிடப்பட்டன. அதில் குடும்பங்களுக்குள் இருக்கும் இணைப்பை குறிக்கும் விதமாக நதிகள் மற்றும் நிலம் குறியீடும், முன்னோர்கள் மற்றும் நமக்கு முன்னாள் விளையாடியோரை நினைவுகூரும் விதமாக நட்சத்திரங்களின் படங்களும், மேலும் 1868 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணியை கவுரவிக்கும் விதமாகவும் ஜெர்சியின் பின்னால் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல புதிய டிஸைனுடன் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்ஸி வடிவமைக்கட்டிருந்தது.

Team india will wear retro theme Jersey against australia surface

இந்த நிலையில் இந்திய அணியும் புதிய ரெட்ரோ ஜெர்சியுடன் விளையாடும் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இந்திய அணியின் ஜெர்சி 1992ல் இருந்த இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியின் டிசைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் இந்திய அணி விவரங்கள் :

டெஸ்ட் அணி – விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், விரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்

ஒருநாள் தொடருக்கான அணி – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

இந்திய டி20 அணி – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments