Monday, November 28, 2022
Homeவிளையாட்டு செய்திகள்கிரிக்கெட் செய்திகள்கோலி - சூர்யகுமார் யாதவ் மோதலால் பரபரப்பு.. பெங்களூர் vs மும்பை போட்டியில் என்ன...

கோலி – சூர்யகுமார் யாதவ் மோதலால் பரபரப்பு.. பெங்களூர் vs மும்பை போட்டியில் என்ன நடந்தது?

அபுதாபி: நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான மோதல் வைரலாகியுள்ளது. இதனால் இருதரப்பு ரசிகர்கள் இடையே இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது.

இந்திய அணியில் 2019 உலகக்கோப்பை தோல்விக்கு விராட் கோலி கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஒரு அணியும், ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்று ஒரு அணி என்று இரண்டு அணிகள் உருவாக்கி இருப்பதாக கூறப்பட்டது. நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியும் அப்படியாகவே பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி குறித்த விவரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பு வெளியானது . அதில் மூன்று வகையான இந்திய அணியிலும் ரோஹித் ஷர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரை இந்த தொடரில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் இந்திய அணி பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. இதன் மூலம் ரோஹித் ஷர்மாவுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டது போன்ற விமர்சனங்கள் அதன்மூலம் எழுந்தது. அந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக மாயங்க் அகர்வாலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 3 சீசன்களாக நன்றாக விளையாடியும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மும்பை அணியின் முக்கியமான 2 வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மும்பை அணி கூடாரமே விரக்தியில் இருந்துள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் முக்கியமான போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது . அடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதில் மும்பை அணியில் இறுதிவரை சூர்யகுமார் யாதவ் தான் அதிரடியாக ஆடினார். அவர் மொத்தம் 43 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடக்கம். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் பொழுது ஆர்சிபி வீரர்கள் அவரை முறைத்தபடியே இருந்தனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி சூரியகுமார் யாதவ் அடித்த பந்துகளை தடுக்கும் போதெல்லாம் ஆக்ரோஷமாகவே காணப்பட்டார்.

13வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை பிடித்துவிட்டு விராட் கோலி அவரை பார்த்து முறைத்தபடியே நின்றார். பதிலுக்கு சூர்யகுமார் யாதவும் அவரை முறைத்து பார்த்தபடியே நின்றார். அதன் பிறகு கோபம் அடைந்த கோலி ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அருகே வந்து நின்று அவரை சீண்டுவது போல பந்தை தேய்த்துக்கொண்டு நின்றார். ஆனால் அப்போது சூர்யகுமார் யாதவ் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டார். பின்னர் இறுதியாக மும்பை அணியை வெற்றிபெற வைத்த பின்பு சூர்யகுமார் யாதவ் ஹெல்மட்டை கழட்டி தன் அணியினரை பார்த்து நான் இங்க தான் இருப்பேன் என்பது போல செய்கை காட்டியிருந்தார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தன்னை அணியில் எடுக்காத கோலிக்கு நேற்றைய போட்டியில் பேட்டிங் மூலம் சூர்யகுமார் யாதவ் பதில் கொடுத்துவிட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர்.

இவர்களுடைய மோதல் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் க்ரிஸ்மோரிஸ் ஹர்திக் பாண்டியா இடையேயும் மோதல் ஏற்பட்டது. 18 வது ஓவரில் க்ரிஸ்மோரிஸ் ஓவரில் ஹர்திக் பாண்டிய சிக்ஸ் அடித்துவிட்டு அவரை பார்த்து ஏதோ சொல்லி சிரிக்க. அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுத்துவிட்டு க்ரிஸ்மோரிஸ் ஏதோ சொல்லி சிரித்தார். இதனால் கோபமடைந்த ஹர்திக் பாண்டியா பெவிலியன் செல்லும் போது மீண்டும் திரும்பி வந்து கோபமாக பேசிவிட்டு சென்றார். ஐபிஎல் தொடரின் இரண்டு முக்கியமான அணிகளும் போட்டியின் போது இப்படி மாறி மாறி மோதிக்கொண்டது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments