சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஆடிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த சோத்தை ஏற்படுத்தியுள்ளது. 270 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டி சவாலாக ஒன்றும் அமையவில்லை என்பதே உண்மை. ஆனால், இந்திய வீரர்கள் போட்டியில் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டு கடைசியில் தோல்வியையும் தழுவினர். இதன்மூலம் தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் வென்ற பெருமையை இந்திய அணிக்கு 9வது தொடரையும் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
ஹாட்ரிக் டக் அவுட்
இந்த போட்டியில் இந்திய அணியில் விராட்கோலி, கே.எல்.ராகுல். சுப்மன்கில் ஹர்திக் என அனைவரும் சீரான பங்களிப்பு அளித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகவும் வேதனைக்குரியதாகும். இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை காட்டிலும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்தான் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே 4வது இடத்திற்கான சரியான ஆள் என்பது இல்லாமலே இருந்து வந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த வேலையை யுவராஜ்சிங் கச்சிதமாக செய்து வந்தார். அவருக்கு பிறகு 4வது இடத்தில் நிலையாக ஆடக்கூடிய வீரர் இந்திய அணிக்கு இல்லை என்றே சொல்லலாம்.
கேள்விக்குறியாகும் 4வது இடம்:
எத்தனையோ வீரர்களை பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லாத நிலையில், 4வது இடத்திற்கு மிகச்சரியான தேர்வாக வந்தவர் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், நடைபெற்ற 3 போட்டிகளிலும் டக் அவுட்டாகி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்,
50 ஓவர் உலகக்கோப்பை இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடும் விதம் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகவே மாறியுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய ஆட்டமும், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் ஆட்டமும் முற்றிலும் மாறாக உள்ளது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில் அவரது ஓப்பனிங் இடம் பறிக்கப்பட்டு, அவர் விக்கெட்கீப்பராக மட்டுமே களமிறங்கி வருகிறார். 4ம் இடத்தில் ஆடிய அனுபவம் கொண்ட கே.எல்.ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்விற்கு இந்திய அணி நிர்வாகம் 4வது இடத்தில் ஆட வாய்ப்பு அளித்து வருகிறது.
நெருக்கடியில் சூர்யா:
இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்திற்கு அக்ஷர் படேல் சூர்யகுமார், ஹர்திக்கிற்கு முன்னதாகவே வந்தார். ஆனால், அனைத்து போட்டிகளுக்கும் அது சாத்தியமற்றது.
ஆனால், உள்நாட்டிலேயே அவர் மோசமாக டக் அவுட்டாகியிருப்பது 4வது இடத்திற்கு சரியான ஆளை தேர்வு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து மீண்டாலும் அவரும் தொடர்ச்சியான ஆட்டத்தை 4வது இடத்தில் காட்ட வேண்டியது அவசியம். இந்திய அணி வீரர்கள் இனிமேல் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே 2 மாத காலத்திற்கு கவனம் செலுத்த உள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டியுள்ளனர்.
இந்த நிலையில், கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள சூர்யகுமார்யாதவ் ஐ.பி.எல். தொடர் மட்டுமின்றி, அடுத்து இந்திய அணி களமிறங்கும் ஒருநாள் தொடரிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார். இந்தியாவின் 360 டிகிரி வேகத்திற்கும், சுழலுக்கும் ஸ்டம்புகளையும், விக்கெட்டையும் பறிகொடுப்பது சூர்யகுமார் மட்டுமின்றி இந்திய அணியையும் தடுமாற வைத்துள்ளது என்றே கூறலாம்.
ALSO READ | அடேங்கப்பா..! ஒரு சதம் அடிக்குறதுக்கு இவ்ளோ வருஷம் தேவைப்பட்டுச்சா..?