Sunday, May 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்இந்திய அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்கள் யார்? யார்?

இந்திய அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்கள் யார்? யார்?

இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். அந்தளவு களத்தில் நங்கூரமிட்டு ஆடுவதில் கில்லாடி. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லியில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினால் அது இந்திய அணிக்காக அவர் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இந்திய அணிக்காக இதற்கு முன்பு 12 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

1. சச்சின் டெண்டுல்கர் – 200 டெஸ்ட்
2. ராகுல் டிராவிட் – 163 டெஸ்ட்
3. வி.வி.எஸ். லட்சுமணன் – 134 டெஸ்ட்
4. அணில் கும்ப்ளே – 132 டெஸ்ட்
5. கபில்தேவ் – 131 டெஸ்ட்
6. சுனில் கவாஸ்கர் -125 டெஸ்ட்
7. திலீப் வெங்கர்சகர் -116 டெஸ்ட்
8. சவ்ரவ் கங்குலி – 113 டெஸ்ட்
9. இஷாந்த் சர்மா – 105 டெஸ்ட்
10. ஹர்பஜன்சிங் – 103 டெஸ்ட்
11. வீரேந்திர சேவாக் – 103 டெஸ்ட்
12. விராட்கோலி – 105 டெஸ்ட்

புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 34 அரைசதங்கள் ஆகும். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 390 ரன்களை எடுத்துள்ளார். புஜாரா இந்திய அணிக்காக 2010ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.

ALSO READ | டெஸ்ட்டில் பெஸ்ட் யார்? விராட்கோலி..? ஸ்டீவ் ஸ்மித்தா..? வரலாறு சொல்வது என்ன?