எந்த ஒரு விஷயத்தை சாதிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை. இதை சமீபத்தில் நிரூபித்தவர் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன். 40 வயதை கடந்த ஆண்டர்சன்தான் உலகிலேயே நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ஆவார்.
இந்த நிலையில், தற்போது சர்வதேச அளவில் அதிக வயதான டெஸ்ட் வீரர்கள் அதாவது கடந்த 12 மாதங்களில் அவர்கள் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியிலாவது விளையாடிவர்கள் என்ற அடிப்படையில் உள்ள முதல் 15 வீரர்களை காணலாம்.
1. ஆண்டர்சன்:
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார். அவர் 40 வயது 211 நாட்களில் தன்னுடைய கடைசி டெஸ்டை ஆடியுள்ளார்.
2. அசார் அலி:
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அசார் அலி 38 வயது 7 நாட்களில் கடைசியாக டெஸ்ட் ஆடியுள்ளார்.
3. கிரெக் எர்வின்:
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் கிரெக் எர்வின் 37 வயது 191 நாட்களில் கடைசியாக டெஸ்ட் ஆடியுள்ளார்.
4. பாவத் ஆலம்:
பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பாவத் ஆலம் 37 வயது 141 நாட்களில் கடைசியாக தனது டெஸ்ட்டில் ஆடியுள்ளார்.
5. வாக்னர்:
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் வாக்னர் 36 வயது 350 நாட்களின்போது தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார்.
6. யாஷிர்ஷா:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா 36 வயது 300 நாட்களில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் தற்போது வரை ஆடியுள்ளார்.
7. ஸ்டூவர்ட் பிராட்:
இங்கிலாந்தின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 36 வயது 247 நாட்களில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
8. கிராண்ட்ஹோம்:
நியூசிலாந்து அணியின ஆல்ரவுண்டர் கிராண்ட்ஹோம் 36 வயது 219 நாட்களில் கடைசியாக டெஸ்ட் ஆடியுள்ளார்.
9. சிபாபா:
ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் சிபாபா 36 வயது 173 நாட்களில் கடைசியாக தனது நாட்டிற்காக களமிறங்கியுள்ளார்.
10. அஸ்வின்:
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான அஸ்வின் இந்திய அணிக்காக கடைசியாக 36 வயது 162 நாட்களில் களமிறங்கியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட வீரர்கள் யாரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. இதுவரை அவர்கள் கடைசியாக ஆடிய போட்டிகளின்போது அவர்களின் வயது அடிப்படையில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.