Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சொதப்பலோ சொதப்பல்..! மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது எப்போது?

சொதப்பலோ சொதப்பல்..! மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது எப்போது?

டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பு அளித்தாலும் அனைவரது கேள்வியும் தற்போது கே.எல்.ராகுலின் பேட்டிங் பார்ம் பற்றியே எழுந்துள்ளது.

இந்தியாவின் வளரும் நட்சத்திர வீரரும், அருமையான பார்மில் உள்ள சுப்மன்கில்லை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு புதுமாப்பிள்ளையான கே.எல்.ராகுலுக்கு முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணிக்கு முக்கியமான அந்த 4 இன்னிங்சிலும் கே.எல்.ராகுல் சொதப்பியது அனைவருக்கும் கடுப்பை ஏற்படுத்தியது என்பதே உண்மை.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஆடி வரும் கே.எல்.ராகுல் கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் அதாவது கடைசி 20 இன்னிங்சில் எடுத்த ரன்களை கீழே பாரக்கலாம்.

  • 129 ரன்கள் – இங்கிலாந்திற்கு எதிராக
  • 5 ரன்கள் – இங்கிலாந்திற்கு எதிராக
  • டக் அவுட் – இங்கிலாந்திற்கு எதிராக
  • 8 ரன்கள் – இங்கிலாந்திற்கு எதிராக
  • 17 ரன்கள் – இங்கிலாந்திற்கு எதிராக
  • 46 ரன்கள் – இங்கிலாந்திற்கு எதரிாக
  • 123 ரன்கள் – தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
  • 23 ரவ்கள் – தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
  • 50 ரன்கள் – தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
  • 12 ரன்கள் – தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
  • 10 ரன்கள் – தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக
  • 22 ரன்கள் – வங்காளதேசத்திற்கு எதிராக
  • 23 ரன்கள் – வங்காளதேசத்திற்கு எதிராக
  • 10 ரன்கள் – வங்காளதேசத்திற்கு எதிராக
  • 2 ரன்கள் – வங்காளதேசத்திற்கு எதிராக
  • 20 ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
  • 17 ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
  • 1 ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக

கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தே 11 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டது. அவர் கடந்த 20 இன்னிங்சில் 2 சதம் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் லார்ட்சில் 2021ம் ஆண்டு அடித்த சதம் ஒன்று, மற்றொன்று கடந்தாண்டு அடிக்கப்பட்ட சதம் ஆகும்.

இப்படி சுத்தமாக ஃபார்மிலே இல்லாமல் தவிக்கும் கே.எல்,ராகுலுக்கு எந்த அடிப்படையில் அணியில் இடம் அளிக்கப்படுகிறது என்று முன்னாள் வீரர்கள் பலரும், கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அடுத்த டெஸ்ட் போட்டியிலாவது வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குமா இந்திய அணி?