Monday, September 27, 2021
Home விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் தொடர் ஏமாற்றம் கொடுத்தது.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் பரபரப்பு கருத்து

ஐபிஎல் தொடர் ஏமாற்றம் கொடுத்தது.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் பரபரப்பு கருத்து

ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டியின் போதும் கூட கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறையை கண்டிப்பது தொடர்பாக முட்டிகால் போட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தாதது ஏமாற்றமாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மின்னபோலீஸ் நகரில் ஜார்ஜ் பிளாயிடு என்கிற கறுப்பினத்தவரை போலீசார் கைதுசெய்ய முயன்ற போது அவருடைய கழுத்தில் கால்களை வைத்து அழுத்தியதில் மூச்சுத்திணறி அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அமெரிக்காவின் பல பகுதிகளிலும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது.

Jason holder disappointed over ipl

அமெரிக்காவில் தொடரும் கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியது. பல விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்களும் போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் பிரச்சாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பல விளையாட்டு போட்டிகளின் போதும் கறுப்பினத்தவர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதன் மூலம் முட்டிகால் போட்டு வீரர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

கொரோனா கால லாக்டவுன் முடிந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியின் போதும் அணைத்து வீரர்களும் முட்டிகால் போட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தான் உலகின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் இது தொடர்பாக எந்த போட்டியிலும் பேசாதது ஏமாற்றம் அளிப்பதாக ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் .

கிரிக்கெட் ரைட்டர்ஸ் கிளப் ஏற்பாடு செய்த ஆன்லைனில் நடைபெற்ற விழாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சார்பாக மதிப்புமிக்க பீட்டர் ஸ்மித் விருதை ஜேசன் ஹோல்டர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஜேசன் ஹோல்டர் பேசும் பொழுது இதுவரை எங்களிடையே பிளாக் லிவ்ஸ் மேட்டர் விவகாரம் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் கூட நடைபெறவில்லை. சில நேரங்களில் அது கவனிக்கப்படாமல் போய்விட்டது போல் தெரிகிறது, இது ஒரு கவலைக்குரிய விஷயம். கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா அணிகளுடனான தொடரின் போது அது கைவிடப்பட்டது. இது ஒரு நீண்ட விவாதம், கடினமான சவால், நீண்ட பாதை. மக்களாகிய நாம் தொடர்ந்து ஒன்று சேர வேண்டும். மேலும் உலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உண்மையான வழிகளை நாம் கண்டறிய வேண்டும் என்றும் ஹோல்டர் கூறினார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments