Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் இதுவரை எத்தனை கேப்டன்கள்? முழு பட்டியல் உள்ளே..!

ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் இதுவரை எத்தனை கேப்டன்கள்? முழு பட்டியல் உள்ளே..!

ஐ.பி.எல். திருவிழா இந்தியாவில் வரும் மார்ச் 31-ந் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து, இதுவரை ஒவ்வொரு அணிகளும் எத்தனை கேப்டன்களை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கீழே காணலாம்.

1. பஞ்சாப் கிங்ஸ்:

முதல் சீசன் முதல் ஆடிவரும் அணி பஞ்சாப். அந்த அணியும் கோப்பையை கைப்பற்ற இதுவரை எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்த அணிக்கு இதுவரை 13 பேர் கேப்டன்களாக இருந்துள்ளனர். கில்கிறிஸ்ட், ஜார்ஜ் பெய்லி, டேவிட் ஹஸ்ஸி, கிளென் மேக்ஸ்வேல் ஆகிய ஆஸ்திரேலியர்களும், யுவராஜ்சிங், ஜெயவர்த்தனே, சேவாக், சங்கக்கரா, அஸ்வின், டேவிட் மில்லர், முரளி விஜய், கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் கேப்டன்களாக இருந்துள்ளனர். நடப்பு சீசனிலும் புதிய கேப்டனுடன் பஞ்சாப் களமிறங்குகிறது.

2. டெல்லி கேபிடல்ஸ்:

டெல்லி அணியும் முதல் சீசன் முதல் கோப்பையை கைப்ற்ற ஆடி வருகிறது. அந்த அணி இதுவரை 12 கேப்டன்களை பயன்படுத்தியுள்ளது. சேவாக், ஜெயவர்த்தனே, ஸ்ரேயாஸ் அய்யர், ஜாகீர் கான், கௌதம் கம்பீர், டுமினி, கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், ஜேம்ஸ் ஹோப்ஸ், கருண் நாயர், டேவிட் வார்னர், ரிஷப்பண்ட் ஆகியோர் ஆடியுள்ளனர். ரிஷப்பண்ட் காயத்தில் சிக்கியதால் வரும் சீசனில் புதிய கேப்டனுடன் டெல்லி களமிறங்க உள்ளது.

3. மும்பை இந்தியன்ஸ்:

ஐ.பி.எல். கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணிகூட 7 கேப்டன்களை பயன்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், ரிக்கிபாண்டிங், ஹர்பஜன்சிங், பொல்லாக், ப்ராவோ,கீரன் பொல்லார்ட் ஆகியோரும் ரோகித்சர்மாவுடன் கேப்டன்சியை பகிர்ந்துள்ளனர்.

4. சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:

2013ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னர், வில்லியம்சன், ஷிகர்தவான், சங்ககரா, ஒயிட், புவனேஷ்வர்குமார், டேரன் சமி ஆகியோரை கேப்டன்களாக பயன்படுத்தியுளளது. வரும் தொடரில் வாஷிங்டன் சுந்தர் கேப்டனாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. பெங்களூர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட்கோலி மட்டுமின்றி டேனியல் வெட்டோரி, கும்ப்ளே, ராகுல் டிராவிட், பீட்டர்சன், வாட்சன் ஆகியோரை கேப்டனாக நியமித்து ஆடியுள்ளது. கோலிக்கு பிறகு டுப்ளிசிஸ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

6. ராஜஸ்தான் ராயல்ஸ்:

முதல் ஐ.பி.எல். கோப்பையை வென்ற பெருமையை கொண்ட ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்னேவிற்கு பிறகு வாட்சன், ஸ்மித், ராகுல் டிராவி்ட, ரஹானே, சஞ்சு சாம்சன் கேப்டனாக இருந்துள்ளனர்.

7. கொல்கத்தா:

இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு சவ்ரவ் கங்குலி, மெக்கல்லம். கம்பீர் ஆகியோருடன் தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் கேப்டனாக இருந்துள்ளனர்.

8. சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐ.பி.எல். தொடரிலே அதிக ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணிக்கு இதுவரை மூன்று பேர் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளனர். எம்.எஸ்.தோனியே சென்னையின் நிரந்தர கேப்டன் என்றே ரசிகர்கள் அழைக்கும் வகையில் நான்கு பட்டங்களை வென்றுள்ளார். அவர் ஆட முடியாத சூழலில் ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். கடந்த சீசனில் ஜடேஜா கேப்டனாக இருந்தார். பின்னர் தோனியே மீண்டும் கேப்டன்சிக்கு திரும்பினார்.

புதிய அணியான நடப்பு சாம்பியன் குஜராத்திற்கு ஹர்திக் பாண்ட்யாவும், லக்னோவிற்கு கே.எல்.ராகுலும் கேப்டனாக உள்ளனர்.

ALSO READ | சொதப்பலோ சொதப்பல்..! மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது எப்போது?