இந்தூரில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்ததில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முழுக்க, முழுக்க பேட்டிங்கே காரணம் என்று கூறலாம்.
மோசமான பேட்டிங்:
ஆட்டம் நடைபெற்ற இந்தூர் மைதானம் தரமற்ற மைதானம் என்று ஐ.சி.சி. தரமதிப்பீடு அளித்திருந்தாலும், இந்திய அணியின் தோல்விக்கு பெரும்பாலும் காரணம் மோசமான பேட்டிங்கே ஆகும். ஏனென்றால், இந்திய அணியின் பந்துவீச்சு இந்த மைதானத்தில் அபாரமாகவே இருந்தது. ஏனென்றால், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை இந்திய 197 ரன்களுக்கு சுருட்டியது. 76 ரன்களுக்கு எதிரணியை சுருட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.
இந்த போட்டி மட்டுமின்றி இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி பேட்டிங் சொதப்பலாகவே அமைந்து வருகிறது. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் டெயிலண்டர்கள்தான் அணிக்கு கைகொடுத்து காப்பாற்றினர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உலா வரும் ரோகித்சர்மா, விராட்கோலி, புஜாரா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை.
சொதப்பிய நட்சத்திரங்கள்:
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற புதுமாப்பிள்ளை கே.எல்.ராகுல் 4 இன்னிங்சிலும் மோசமாக அவுட்டாகி இன்னும் பார்முக்கு திரும்பவில்லை என்பதை நிரூபித்தார். டி20, ஒருநாள் போட்டிகளில் கம்பேக் அளித்த விராட்கோலி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் தனது திறமைக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரராக கருதப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை,. ரிஷப்பண்ட் இல்லாத நிலையில், அணியில் வாய்ப்பு பெற்ற கே.எஸ். பரத் தன்னை நிரூபிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். அவருக்கும் அனைத்து இன்னிங்சிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த தொடரில் புஜாரா ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசினாலும் சீனியர் வீரரான அவர் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்கடைசி கட்டத்தில் களமிறங்கும் ஜடேஜா, அக்ஷர்படேல் அஸ்வின் போன்றோர் சேர்க்கும் ரன்களே இந்திய அணிக்கு பலமாக அமைந்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால். கடைசி டெஸ்ட்டை கட்டாயம் வென்றாக வேண்டும்.
அந்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற இந்திய வீரர்கள் தங்களது பேட்டிங் திறமையை கட்டாயம் வெளிக்காட்டியாக வேண்டும். ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியை நேற்றை வெற்றி மூலம் உறுதி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கபில்தேவ் வரிசையில் இணைந்த ஜடேஜா..! இதுவரை 2 இந்தியர்கள் மட்டுமே படைத்துள்ள சாதனை…!