Tuesday, May 23, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா..? ஆறுதல் வெற்றியாவது பெறுமா நியூசிலாந்து? இன்னும் சற்று நேரத்தில் மோதல்

ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா..? ஆறுதல் வெற்றியாவது பெறுமா நியூசிலாந்து? இன்னும் சற்று நேரத்தில் மோதல்

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணி இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்று இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று களமிறங்குகின்றனர்.

இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பலத்துடன் உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக, இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் அசுர பலத்திற்கு திரும்பியுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக,ரோகித் சர்மா பெரிய ஸ்கோர்களை குவிக்காவிட்டாலும் நல்ல தொடக்கத்த அளித்து வருகிறார். சுப்மன்கில் பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட்கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்றைய போட்டியில் கோலியின் வாண வேடிக்கையை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கலாம். கடந்த 2 போட்டியில் களமிறங்காத இந்திய வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம். நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இன்றைய போட்டியில் அவர்கள் நிச்சயம் பொறுப்புடன் ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.

பின்வரிசை வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் காரணமாகவே அந்த அணி கடந்த 2 போட்டியிலும் ரன்களையே சேர்க்க முடிந்தது. டாம்லாதம், மிட்செல், கான்வே, ஆலன் கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய பவுலிங்கில் சிராஜ் மிரட்டி வருகிறார். முகமது ஷமி, ஹர்திக்கும் பவுலிங்கில் அசத்துவார்கள் என்று நம்பலாம்.

நியூசிலாந்து அணியினரும் பந்துவீச்சில் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்லும். இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது.