Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்அடுத்தடுத்து அதிர்ச்சி..! மேக்ஸ்வெல் காயம் ஆஸ்திரேலியாவுக்கு சோகமா?

அடுத்தடுத்து அதிர்ச்சி..! மேக்ஸ்வெல் காயம் ஆஸ்திரேலியாவுக்கு சோகமா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது, அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தவிர்க்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

காயம்:

ஒருநாள் தொடரில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலிய இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் உள்ளது. அந்த அணிக்கு பெரிய பலமாக ஒருநாள் தொடரில் பார்க்கப்படுபவர் மேக்ஸ்வெல். ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் தற்போது விக்டோரியா அணிக்காக ஆஸ்திரேலியாவில் ஆடி வருகிறார்.

இந்திய தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மேக்ஸ்வெல்லுக்கு பலத்த அதிர்ச்சிதான் மிஞ்சியது. விக்டோரியா அணிக்காக இன்று ஆடியபோது அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து தாக்கியதில் காயமடைந்தார். அதன்பின்னர், அவருக்கு பேட் செய்ய அணி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

பின்னடைவா?

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் பெரிய பலமே ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். இந்திய மண்ணில் ஒருநாள் மற்றும் ஐ.பி.எல். போட்டி ஆடிய அனுபவமிகுந்த வீரரான மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்காமல் போனால் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் வார்னரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விலகியுள்ளார். அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? என்பது சந்தேகமாக அமைந்துள்ளது. இந்த சூழலில் இன்று காயத்திற்கு ஆளாகியுள்ள மேக்ஸ்வெல் ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது மேக்ஸ்வெல் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத நிலைக்கு ஆளான ஆஸ்திரேலிய அணி தற்போது ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்கள் ஆடாத நிலையில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.