Saturday, May 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்தரம்சாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்ட 3வது டெஸ்ட்..! என்ன காரணம் தெரியுமா?

தரம்சாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்ட 3வது டெஸ்ட்..! என்ன காரணம் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய – இந்திய அணி மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சலில் உள்ள தரம்சாலாவில் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“ இப்பகுதியில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால் வெளிப்புற மைதானத்தில் போதுமான புல் அடர்த்தி இல்லை. மேலும் முழுமையாக வளர்ச்சியடைய சிறிது அவகாசம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
2016-2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றியதற்கான வெற்றியை தீர்மானித்தது இதே தரம்சாலா மைதானம்தான். அந்த போட்டியில்தான் இந்திய அணிக்காக குல்தீப்யாதவ் அறிமுகமாகி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போது போட்டி மாற்றப்பட்டுள்ள இந்தூர் மைதானமும் இந்திய அணிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்த போட்டியில் இந்திய அணிதரம்சாலா மைதானத்தில் இருந்து ஏன் மாற்றப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ. அளித்துள்ள விளக்கத்தில், முதன்முறையாக நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதியது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தூர் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பின்னர், 2019ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் நடக்கும் சர்வதேச 3வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்த மைதானத்தில் பெரும்பாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளே நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 17-ந் தேதி டெல்லியிலும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்திலும் நடக்க உள்ளது. மிகவும் அழகான மாநிலங்களில் ஒன்றான ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட்டதால் அங்குள்ள ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.