Sunday, May 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்பி.சி.சி.ஐ.யிடம் மன்னிப்பு கேட்ட ஐ.சி.சி..! என்ன காரணம்?

பி.சி.சி.ஐ.யிடம் மன்னிப்பு கேட்ட ஐ.சி.சி..! என்ன காரணம்?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், ஐ.சி.சி. நேற்று புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நாக்பூர் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான பட்டியலில் தற்போது 2வது இடத்தில் இருக்கும் நிலையில், ஐ.சி.சி. வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலால் இந்திய ரசிகர்கள் குஷி அடைந்தனர். ஆனால், இந்த புள்ளிப்பட்டியலில் முரண்பாடுகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

மன்னிப்பு:

இந்த நிலையில், ஐ.சி.சி. வெளியிட்ட அறிவிப்பின்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரவரிசைப் பட்டியலில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில்தான் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவே முதலிடத்தில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த தவறுக்கு பி.சி.சி.ஐ.யிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பிறகே புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 115 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசை

ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும். பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளனர்.

டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும், நியூசிலாந்து 5வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.