Monday, September 27, 2021
Home விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள் இளம் வீரர்கள் பற்றி கருத்து.. சர்ச்சையில் சிக்கிய தோனி

இளம் வீரர்கள் பற்றி கருத்து.. சர்ச்சையில் சிக்கிய தோனி

அபுதாபி : நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே அவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை அணியில் நீண்ட காலமாகவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, மூத்த வீரர்கள் சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு வழங்கும் கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் கேதர் ஜாதாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மோசமான பேட்டிங் ஆர்டர் காரணமாக 125 ரன்கள் மட்டுமே எடுத்தது . பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் 3 விக்கெட் மட்டுமே இழந்து 17.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு பிகு பேசிய கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் வீரர்களுக்கு சமமாக வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்கள் சரியாக விளையாடுகிறார்களா என பார்த்து இல்லையென்றால் வேறு வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால் வீரர்களை அடிக்கடி மாற்ற கூடாது என்றார்.

மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம் ஆனால் அவர்களிடம் எங்களால் ஸ்பார்கை பார்க்க முடியவில்லை என்றார். இதுதான் சர்ச்சைக்கு காரனம் . இளைஞர்களுக்கு போதிய அளவு வாய்ப்பு வழங்காமல் எப்படி ஸ்பார்க் இல்லையென்று கூற முடியும் எனவும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேதர் ஜாதவிடம் என்ன ஸ்பார்கை தோனி பார்த்துவிட்டார். ஜெகதீசன் தனக்கு கிடைத்த வாய்ப்பிலும் நன்றாக தான் ஆடினார். இவர்கள் எப்போதும் செயல்முறை என கூறுவதே தவறு. இளைஞர்களுக்கு வாய்ப்பே கொடுக்காதது ஏன் என்றும் கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.

இணையதளங்களிலும் ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். பெங்களூர் அணியில் வாஷிங்க்டன் சுந்தர், கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, ஹைதராபாத் அணியில் நடராஜன் என முக்க்கியமான அணிகளில் எல்லாம் இளம் தமிழக வீரர்கள் அசத்தும் பொழுது ஏன் சென்னை அணியில் மட்டும் இளம் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்தமுறை ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய அணியில் தேர்வாகாத உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடும் தமிழக இளம் வீரருக்கு வாய்ப்புக்கு கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. அந்த போட்டியில் தன்னுடைய திறமையை ஜெகதீசன் நிரூபித்தும் கூட அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments