Friday, September 17, 2021
Home விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள் வரணும்.. பழைய தோனியா திரும்ப வரணும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

வரணும்.. பழைய தோனியா திரும்ப வரணும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீண்டும் பழைய தோனி போன்று அதிரடியாக விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சிஎஸ்கே இந்த ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பலரும் ஒட்டுமொத்த அணியின் ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தோனியின் தலைமை குறித்தும் அவருடைய தனிப்பட்ட ஆட்டம் குறித்தும் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் முழுவதுமே தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை, தொடக்கத்தில் நிதானமாக ஆடியதாக புகார் எழுந்த நிலையில் அதன் பின்னர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து உடனே விக்கெட்டுகளை பறிகொடுக்கிறார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கில் தோனி அதிகம் தடுமாறுகிறார். இந்த சீசனில் தோனி வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் தோனி மீண்டும் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் உலகின் மிகசிறந்த ஃபினிஷராக கருதப்படும் தோனி இந்த சீசனில் அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.பல சிறந்த பேட்ஸ்மேன்கள் மோசமான கட்டத்திற்குள் சென்றுள்ளதை நான் பார்த்திருக்கிறேன். தோனி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்றால் முரட்டுத்தனமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தோனி பழைய தோனியாக மீண்டும் மாற வேண்டும், அந்த கால கட்டங்களில் எல்லாம் தோனியிடம் அச்சமின்றி அதிரணிகள் மீது தாக்குதலை நிகழ்த்த கூடியவராக இருந்தார் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

csk skipper dhoni should play like his old version

கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறிய பிறகு தோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்து டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே தான் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போக, தோனியும் தன்னுடைய ஒய்வு முடிவை அறிவித்தார். இதனால் இனி தோனியின் அதிரடி ஆட்டங்களை ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கண்டுகளிக்க முடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டியிலும் தோனியின் பேட்டிங் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்கவில்லை.

இதற்கிடையே தான் இந்த தொடரில் சிஎஸ்கேவின் மோசமான தோல்வி, அணியில் இளம் வீரர்களை எடுக்காதது, தோனியின் மோசமான பார்ம் காரணமாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments