Tuesday, May 23, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்இந்தியாவுக்காகவும், பாகிஸ்தானுக்காகவும் கிரிக்கெட் விளையாடுனவங்க யார்? யார்? தெரியுமா.?

இந்தியாவுக்காகவும், பாகிஸ்தானுக்காகவும் கிரிக்கெட் விளையாடுனவங்க யார்? யார்? தெரியுமா.?

கிரிக்கெட் போட்டிகளில் மிக பழமையான வடிவம் டெஸ்ட் கிரிக்கெட். கிரிக்கெட் வீரரின் மன வலிமைக்கு மிகுந்த போராட்டம் தரக்கூடிய ஆட்டம் டெஸ்ட் போட்டி ஆகும். இதன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறந்து ஆடும் வீரர்களுக்கு என்றுமே தனித்துவமான அங்கீகாரம் உண்டு.

அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டியில் ஒரு நாடுகளுக்கு ஆடுவது என்பதே மிகப்பெரிய கவுரவம் ஆகும். சில வீரர்கள் இரண்டு நாடுகளுக்கு டெஸ்ட் போட்டிக்காக ஆடியுள்ளனர். அவர்களின் பட்டியலை கீழே காணலாம்.

இவர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய வீரர்களும் அடங்குவார்கள். மூன்று வீரர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளனர். குல் முகமது, ஏ.எச். கர்தார் மற்றுமு் அமீர் எலாஹி ஆகிய மூன்று பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிவதற்கு முன்பு இந்தியாவிற்காகவும், பிரிந்த பின்பு பாகிஸ்தானுக்காகவும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்கள்.

இரு நாடுகளுக்காக டெஸ்ட் ஆடியவர்கள்:
• மிட்வின்டர் – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
• முர்டோச் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
• ஜெ.ஜெ. பெரீஸ் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
• எஸ்.எம்.ஜே. உட்ஸ் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
• ஹியர்னே – இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா
• ட்ரோட் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
• மிட்செல் – இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா
• நவாப் படோடி சீனியர் – இங்கிலாந்து, இந்தியா
• குல் முகமது –இந்தியா, பாகிஸ்தான்
• ஏ.எச்.கர்தார் – இந்தியா, பாகிஸ்தான்
• அமீர் எலாஹி – இந்தியா, பாகிஸ்தான்
• குல்பென் – வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து
• ட்ரைகோஸ் – தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே
• வெஸ்ஸெல்ஸ் – ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா
• ராங்கின் – இங்கிலாந்து, அயர்லாந்து
• கேரி பேலன்ஸ் – இங்கிலாந்து, ஜிம்பாப்வே

தற்போது ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கிய கேரி பேலன்ஸ் முன்னதாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். தற்போது 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ஜிம்பாப்வேவிற்காக ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.