Thursday, May 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்டெஸ்ட்டில் பெஸ்ட் யார்? விராட்கோலி..? ஸ்டீவ் ஸ்மித்தா..? வரலாறு சொல்வது என்ன?

டெஸ்ட்டில் பெஸ்ட் யார்? விராட்கோலி..? ஸ்டீவ் ஸ்மித்தா..? வரலாறு சொல்வது என்ன?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் தொடர் நாளை நாக்பூரில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மோதல் என்பது போலவே விராட்கோலி – ஸ்டீவ் ஸ்மித் இடையேயான மோதலாகவும் அமையப் போகிறது.

உலகளவில் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் யார் என்றால் நிச்சயம் சந்தேகமில்லாமல் விராட்கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும் இருப்பார்கள். இவர்கள் இருவரில் சிறந்தவர்கள் யார்? என்பதை இருவரும் அடிக்கடி நிரூபித்துள்ளனர். இந்த நிலையில், இந்தியா என்றால் ஸ்டீவ் ஸ்மித்தும், ஆஸ்திரேலியா என்றால் விராட்கோலியும் தங்களது மட்டைகளை சரமாரியாக சுழற்றி ரன்களை குவிக்கின்றனர்.

ஸ்டீவ் ஸ்மித்:

ஸ்டீவ் ஸ்மித்தின் இந்திய அணிக்கு எதிரான செயல்பாடுகளை கீழே விரிவாக காணலாம்.

• ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
• மொத்தம் 28 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ள ஸ்டீவ் ஸ்மித் 8 சதங்களையும், 5 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
• இந்திய அணிக்கு எதிராக 4 முறை ஆட்டமிழக்காமலும் பேட்டிங் செய்துள்ளார்.
• இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித்தின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 192 ஆகும்.
• இந்திய அணிக்கு எதிராக மட்டும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் 1742 ரன்களை குவித்துள்ளார்.
• இந்திய அணிக்கு எதிராக ஸ்மித்தின் பேட்டிங் சராசரி 72.58 ஆகும்.
ஸ்டீவ் ஸ்மித் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குபவர்.

விராட்கோலி:

இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக திகழ்பவர் விராட்கோலி. இவரது அபாரமான பேட்டிங்கால் பல போட்டிகளில் முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

• விராட்கோலி இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
• மொத்தம் 36 இனனிங்சில் பேட் செய்துள்ள விராட்கோலி 1682 ரன்கள எடுத்துள்ளார்.
• ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 சதங்களையும், 5 அரைசதங்களையும் டெஸ்டில் விளாசியுள்ளார்.
• ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே ஒரு முறை மட்டும் ஆட்டமிழக்காமல் பேட் செய்துள்ளார்.
• ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலியின் அதிகபட்சம் 169 ரன்கள் ஆகும்.
• டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அணிகளுக்கு எதிராக விராட்கோலி இரட்டைசதம் அடிக்காத ஒரே அணி ஆஸ்திரேலிய மட்டுமே ஆகும்.
இந்த தொடர் பார்டர் – கவாஸ்கர் தொடர் என்பதை காட்டிலும் விராட்கோலி – ஸ்டீவ்ஸ்மித் தொடராக அமையப்போகிறது.