Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்இவங்களா அது?.. மிரண்டு போன ஐபிஎல் ரசிகர்கள்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இவங்களா அது?.. மிரண்டு போன ஐபிஎல் ரசிகர்கள்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

சிட்னி : இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தங்களுடைய பேட்டிங் மூலம் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. சிட்னியில் நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருந்த பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் போது மோசமான பார்மில் இருந்த வீரர்கள், இதனால் இந்திய அணி எளிதாக அவர்களை வீழ்த்தி விட முடியும் என்றும் கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல இந்திய அணியும் வலிமையான பிளேயிங் லெவனுடன் களமிறங்கியது.

ஆனால் இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிர்ச்சி கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பின்ச் ஐபிஎல் போட்டிகளின் போது பெங்களூர் அணியில் இடம்பெற்று இருந்த வீரர். 2020 ஐபிஎல் தொடர் முழுவதுமே பின்ச் பெரிய அளவில் பார்மில் இல்லை. ஒன்று இரண்டு போட்டிகளை தவிர மிக மற்ற எல்லா போட்டிகளிலும் தடுமாறி வந்தார். இதனால் கடைசி சில போட்டிகளில் பின்ச் நீக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடைபெற்றது. ஆனால் அதே பின்ச் இன்றைய போட்டியில் வேற லெவல் ஓப்பனிங் கொடுத்தார். இந்திய அணி பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித்தும் இந்த போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார். ஐபிஎல் சீசனில் ஸ்மித் பேட்டிங்கில் பெரிய அளவில் ராஜஸ்தான் அணிக்கு கை கொடுக்கவில்லை. அந்த அணியும் தொடர் தோல்விகளால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஸ்மித் மிக மோசமான பார்மில் இருக்கிறார் அவர் கேப்டன் என்கிற ஒரே காரணத்தினால் தான் எல்லா போட்டிகளிலும் விளையாடுகிறார் இதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வந்தனர். அந்த அளவிற்கு மோசமான பார்மில் இருந்த சடீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார்

அதே போல பஞ்சாபின் கேதர் ஜாதவே என்று ரசிகர்களால் மோசமான கிண்டலுக்கு உள்ளன மேக்ஸ்வெல் தான் இன்று 19 பந்துகளில் 45 ரன்கள் அதிரடியாக விலகியுள்ளார். இதில் 3 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடக்கம். அதன் பின்னர் 2020 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஜோஸ் ஹேசல்வுட்க்கு மிகச்சில வாய்ப்புகளே போட்டிகளில் பங்கேற்க கொடுக்கப்பட்டது, அதிலும் அவர் சிறப்பாக செயல்படாததால் இந்த தொடரில் சென்னை அணி அவரை பயன்படுத்தாமலே வைத்திருந்தது. ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை இவரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் போது யாரெல்லாம் சொதப்பல் வீரர்கள் என்று இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்தார்களோ அவர்கள் எல்லாரும் தான் இந்தியாவுக்கு முதல் ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர்களாக மாறியுள்ளனர்.