ஓரை பார்த்து செயல்படுபவனுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. ஓரை ரகசியம் அறிந்தவர்களுக்கு எதிலும் வெற்றி தான் என்கிறது ஜோதிடம். நாம் தினசரி பார்க்கும் காலண்டருக்கு பின்னால் ஓரை என்று ஒன்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த ஓரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரம் எதற்காக பயன்படுகிறது? அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற தகவல்களை கீழே காணலாம்.
செவ்வாய் ஓரை :
- புதிய நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களை சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய் ஓரை பார்த்து செய்வது நல்லது.
- மருத்துவ உதவிகள் செய்வது, ரத்த தானம், உறுப்பு தானம் போன்ற விஷயங்களை செய்யும் பொழுது செவ்வாய் ஓரையில் செய்யலாம்.
- செவ்வாய் ஓரையில் நல்ல விஷயங்கள், சுபகாரியங்கள் செய்ய முடியாது.
- செவ்வாய் ஓரையில் வம்பு வழக்குகளுக்கு தீர்வு காணலாம். நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்வதற்கும் செவ்வாய் ஓரை உகந்தது ஆகும்.
- இறைவனுக்கு செய்யக்கூடிய தானங்களும், கொடைகளும் இந்த செவ்வாய் ஓரையில் செய்வது நல்லது.
குரு ஓரை :
- சுப ஓரையாக இருக்கும் குருஓரையில் புதிய தொழில் துவங்குவது, வியாபாரத்தை விருத்தி செய்வது, விவசாயம் செய்யத் துவங்குவது போன்ற விஷயங்களை செய்வது வழக்கம்.
- அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது சுபஓரையான குரு ஓரையில் வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும்.
- குரு ஓரையில் கண்டம் விட்டு கண்டம் செல்வது, நீர்வழி பயணங்கள் மேற்கொள்வது, சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வது போன்ற விஷயங்களை செய்தால் தீராத ஆபத்து உங்களை தேடி வந்து சேரும்.
சனி ஓரை :
- சனி ஓரையில் நீங்கள் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுத்தால், மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழ்நிலையே இருக்காது.
- ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகள், நிலுவைத் தொகைகள் என எதுவாக இருந்தாலும், சனி ஓரையில் கொடுக்கும் பொழுது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
- வீட்டில் மரத்தை வளர்க்கும் பொழுது சனி ஓரை பார்த்து வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும்.
- சனி ஓரையில் பாத யாத்திரை, நடைபயணம் போன்றவற்றை துவங்குவது பாவத்தைப் போக்கும்.
- சனி ஓரையில் குடும்பத்தில் பிரச்சனைகளும், கணவன், மனைவிக்குள் வாக்குவாதமும் ஏற்படும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
- சனி ஓரை நேரத்தில் எழும் சர்ச்சைகள் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் கவனம் அவசியம்.
மேற்கண்ட ஓரைகளில் மேலே குறிப்பிட்ட காரியங்களை முறையாக செய்து பாருங்கள். சகலமும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ALSO READ | அறுபடை வீடு கொண்ட திருமுருகா.. சஷ்டி விரதம் இருப்பது எப்படி? என்ன பலன்கள்?