Thursday, June 1, 2023
HomeSpiritualபக்தர்களே.. மாசி மகம் என்றால் என்ன..? அப்படி என்னதான் சிறப்பு..?

பக்தர்களே.. மாசி மகம் என்றால் என்ன..? அப்படி என்னதான் சிறப்பு..?

மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதமாகவும், தனித்துவமான மாதமாகவும் இருப்பது மாசி மாதம். இதன் காரணமாகவே, ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை மாசி மகம்(Masi Magam) என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம். இதனாலே மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்று ஒரு பழமொழி உண்டு.

புனிதமான மாசி மக நாளை கடலாடும் நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும். இந்த மாசி மகமானது சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் முருகப் பெருமானுக்கு உகந்த நாள் ஆகும்.

  • உமாதேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.
  • பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்று தான்.
  • தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் மாசிமகம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. தந்தை சிவபெருமானுக்கே முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம்.
  • பல புண்ணிய வரலாற்றை கொண்ட இந்த மாசிமகம் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
  • கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வதும் நன்மை தரும். நாளை மறுநாள் அதாவது வரும் 6-ந் தேதி மாசிமகம் என்பதால் தமிழ்நாடு முழுவதம் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நீங்களும் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வளங்களை பெறுங்கள்.

ALSO READ | சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த மாசிமகம்…! விரதம் இருப்பது எப்படி?