Monday, May 29, 2023
HomeSpiritualவீட்டில் பணம் கொட்ட வேண்டுமா..? அப்போ கண்ணாடியை இந்த இடங்களிலெல்லாம் மாட்டுங்க..!

வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா..? அப்போ கண்ணாடியை இந்த இடங்களிலெல்லாம் மாட்டுங்க..!

நாம் வீடு கட்டுவதில் மட்டுமல்ல சில முக்கியமான பொருட்களை எந்த இடங்களில் வைக்கிறோம் என்பதிலும் வாஸ்து அடங்கியுள்ளது. மஞ்சள், குங்குமம் போன்று கண்ணாடியும் ஒரு மங்களகரமான பொருள் ஆகும். அதனால்தான் வீட்டில் கண்ணாடி உடைந்தால் நமக்கு கவலை ஏற்படும்.

கண்ணாடியை மஹாலக்ஷ்மியின் மகத்தான சக்தியும், பரிபூரண ஆசியும் கிடைத்து கையில் காசும் பொருளும் சேர்ந்து கிடைக்கும். கோவில்களில் ,மூலவருக்கு எதிராக கண்ணாடியை மாட்டி வைத்திருப்பதை பார்த்து இருப்போம். வீட்டில் நிலைவாசல் படிக்கு மேல் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்கள் அதனை பார்த்து விட்டு வரும் படியாக இருக்கும். அது மிகவும் சரியான ஒரு முறை என்றே கூறலாம். அப்படி நிலைவாசலுக்கு மேல் கண்ணாடி வைக்க முடியாதவர்கள் அங்கு விநாயகர் சிலை வைக்கலாம்.

நமது வீடுகளில் கண்ணாடியை எங்கெல்லாம் வைக்கலாம் என்பதை கீழே விரிவாக காணலாம்.

பீரோ, கல்லா, நகை பெட்டகம்:

கண்ணாடிக்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதால் பணம் வைக்கும் இடங்களான பீரோ,கல்லா பெட்டி , நகை பெட்டி போன்ற இடங்களில் வைத்தால் பணம் பெருகும் என்பது ஐதீகம்.

வீட்டின் பிரதான அறை :

இந்த அறையின் மேற்கு அல்லது தெற்கு திசைகளை நோக்கி கண்ணாடியை வைத்து பாருங்கள். அதாவது மேற்கு திசையையும் தெற்கு திசையையும் பார்த்தவாறு கண்ணாடியை மட்ட வேண்டும்.

பூஜை அறை :

எப்போதும் பூஜை அறையில் ஒரு கண்ணாடி இருக்க வேண்டும். கண்ணாடியை தெய்வப் படங்களுக்கு எதிர்புறத்தில் இருக்குமாறு மாட்டி வைக்க வேண்டும். இப்படி கண்ணாடி மாட்டி வைப்பதால் தெய்வங்களின் பிரதிபலிப்பு அதிகரித்து காணப்படுவதோடு , குல தெய்வத்தின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

குளியலறை:

குளிக்கும் இடமான பாத்ரூமில் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு கண்ணாடியை மாட்டி விட வேண்டும். வீட்டில் எந்த ஒரு திசையிலும் எதிரெதிராக கண்ணாடியை வைக்க கூடாது. ஒரு கண்ணாடியும் மற்றொரு கண்ணாடியும் எதிரொலிக்கிற மாதிரி வைக்கவே கூடாது.

சுவர்களில் மாட்டி வைத்துள்ள கண்ணாடிகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் வெளிக்கேற்றும் போது தூபங்கள் காட்டி வழிபடுங்கள்.

ALSO READ | கோடையிலும் ஆரோக்கியமா இருக்கனுமா? அப்போ வெள்ளரிக்காய் சாப்பிடுங்க..!