இந்த மாதம் 18-ந் தேதி மகாசிவராத்திரி(Maha Shivaratri) கொண்டாடப்பட உள்ளது. சிவனுக்கு மிக உகந்த நாளான அன்றைய தேதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். சிவாலயங்களில் அன்றைய தினம் சிறப்பு பூஜை நடைபெறும்.
திருவண்ணாமலை கிரிவலம் | Tiruvannamalai Girivalam
மிகவும் புகழ்பெற்ற திருவண்ணாமலை(Thiruvannamalai ) ஆலயத்தில் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிவார்கள். திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக கிரிவலம் செல்வார்களம். திருவண்ணாமலை கிரிவலம் செல்வதின் சிறப்பை கீழே காணலாம். கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாளுமே உகந்த நாள் தான். ஆனால் பௌர்ணமி நாளில் செல்லும் கிரிவலத்துக்கு மற்ற நாட்களை விட அதிக சிறப்பு இருக்கின்றது.
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகும். நாம் செய்த பாவங்கள் நீங்க பௌர்ணமி கிரிவலம் சென்றாலே போதும். திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி வடிவிலும், அன்னை உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாகவும் காட்சித்தரும் ஸ்தலமாக திகழ்கிறது.
எட்டு லிங்கங்கள்:
சிவபெருமானை மனதில் நினைத்துக் கொண்டு திருவண்ணாமலையை கிரிவலம் வருவதால் உள்ளமும், உடலும் நலம் பெறும். பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் 14 கி.மீ சுற்றுப் பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து, உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலையாரை வழிபடுவர். இந்தியா முழுவதும் ஏராளமான மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.
திருவண்ணாமலையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு சிவலிங்கங்களும் எண்கோண வடிவில் அமைந்துள்ளன.
ALSO READ | ஓம் நமசிவாய..! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 லிங்கங்கள் என்னென்ன?
செய்ய வேண்டியது? செய்யக்கூடாதது?
பக்தர்களாகிய நாம் திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்குவதற்கு முன் அண்ணாமலையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அவரின் அனுமதி பெற்று கிரிவலம் செல்ல வேண்டும். செல்லும் வழியில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோவில்கள், ஏழு முருகன் கோவில்கள், ஆதி காமாட்சி அம்மன் என மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்வீக கிரிவலப் பாதையாக இது விளங்குகின்றது.
நடந்து செல்லும்போது கைகோர்த்து செல்லுதல், கூட்டமாக பேசி கொண்டே செல்லுதல் போன்ற செயலில் ஈடுபட கூடாது. கிரிவலம் தொடங்கியதில் இருந்து, முடியும் வரை மனதில் சிவ சிவ என சொல்லி கொண்டே செல்ல வேண்டும். மனமுருகி வேண்டிக்கொண்டே அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கிய பிறகே கிரிவலத்தை முடிக்க வேண்டும்.
இவ்வாறு மனதையும், எண்ணத்தையும் ஒன்று சேர்த்து வழிபட, வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டுவார் அருணாச்சலேஸ்வரர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று எம்பெருமான் அருள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.