Tiruvannamalai 8 Lingam: ஆயிரம் அதிசயங்களையும், அற்புதங்களையும் கொண்டதுதான் திருவண்ணாமலை. எம்பெருமானை காண்பதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம். திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வணங்கி ஆனந்தமடைவார்கள்.
கிரிவலம் செல்லும்போது எட்டு லிங்கங்களை வணங்கி செல்ல வேண்டும். வழியில் அமைந்துள்ள எட்டு லிங்கங்கள் பற்றி விரிவாக காணலாம்.
எட்டு லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள்:
- கிரிவலத்தில் முதலாவதாக நாம் வணங்கும் லிங்கம் இந்திர லிங்கம். இந்த லிங்கம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- செங்கம் சாலையில் அமைந்துள்ள இரண்டாவது லிங்கம் அக்னி லிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- கிரிவலப்பாதையில் இராஜகோபுரத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது லிங்கம் எம லிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நான்காவது லிங்கம் நிருதி லிங்கம். இந்த லிங்கம் தென்மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- இராஜகோபுரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஐந்தாவது லிங்கம் வருண லிங்கம். இந்த லிங்கம் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். இந்த லிங்கம் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
- கிரிவலப்பாதையில் எட்டாவது மற்றும் கடைசி லிங்கம் ஈசான்ய லிங்கம். இந்த லிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்த எட்டு லிங்கங்களையும் வணங்கி கிரிவலத்தை திருப்திகரமாக நிறைவு செய்ய வேண்டும்.
ALSO READ | பக்தர்களே.. திருவண்ணாமலை கிரிவலம் ஏன் செல்ல வேண்டும்? கிரிவலம் செல்வது எப்படி? செய்யக்கூடாது என்ன?