இன்றைய மனித வாழ்க்கையில் மனிதனின் மகிழ்ச்சியை மட்டுமின்றி நிம்மதியை தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்தும் போதிய அளவு வருவாய் இல்லாமல் சிலரும், சேர்த்த வருவாயை நல்ல முறையில் சேர்க்க முடியாமல் சிலரும் இருப்பார்கள்.
அதுபோன்று உங்கள் வீட்டில் தனலட்சுமி தங்கவே இல்லை என்றால், கீழே கண்ட முறையை பின்பற்றுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் பணவரவு செழிப்படையும். சுக்கிர யோகம் இருந்தால் நிச்சயம் பணவரவு அருமையாக இருக்கும். சுக்கிர யோகம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஓரையில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதில் தீபம் ஏற்றும் திரியை நன்றாக திரித்து விடுங்கள். தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பூஜை அறையில் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து விட்டு அதில் நெய் ஊற்றி தயார் செய்து வையுங்கள்.
- இந்த வெட்டிவேர் திரியை வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளையை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
- அதன் பின்பு எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வீட்டில் தீபத்தை ஏற்றி வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.
- குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை வைக்க வேண்டும்.
- இவ்வாறு வேண்டினால் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.
- மூன்று வாரம் தொடர்ந்து சுக்கிர ஓரையில் வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத சில நல்ல மாற்றங்கள் நிகழும்.
இது மட்டுமின்றி உங்களுடைய வீட்டில் ஒரு துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும். அந்த துளசி செடிக்கு அருகில் சிறிய அளவில் மாதுளை செடியை வையுங்கள். துளசி செடியும், மாதுளை செடியும் அருகில் இருக்கக்கூடிய வீட்டில் பண கஷ்டம் வராது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமும், செல்வமும் குறைவில்லாமல் இருக்கும்.
ALSO READ | வெயிலுக்கு சருமம் டல் ஆகுதா..?கவலையை விடுங்க.. இதெல்லாம் சாப்பிடுங்க..!