மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எந்தளவு அவசியமோ, அதேபோல நிம்மதியான தூக்கத்திற்கு அவன் எந்த திசையில் தலைவைத்து படுக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நாம் தலைவைத்து படுக்கும் திசைக்கும் நமது வருமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் தூங்கும்போது தவறான திசையில் தலை வைத்திருந்தால் மன அழுத்தம், மரணம், தொழில் விருத்தியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். ஆகவே தலை வைத்து படுக்கும் திசையை கவனத்தில் கொள்ள வேண்டும். பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட தவறான திசையில் தலைவைப்பது தான் காரணமாம்.
வீட்டை கட்டும்போது படுக்கை அறைக்கு வாஸ்து பார்ப்பதோடு நின்று கொள்ளாமல் உறங்கும் திசையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
வடக்கு கூடாது ஏன்?
வடக்கில் தலை வைத்தால் மரண யோகம் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள். ஒருவர் எந்த திசையில் தலை வைத்தாலும் வடக்கில் மட்டும் வைக்கக் கூடாது. இதனால் வீண் பிரச்சினைகள் வரக் கூடும். வடக்கில் தலையும் தெற்கில் காலும் நீட்டும்போது உடல் நலன் போகிறது. மூளை தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. தொழில் நலிவடைந்து போகலாம். குடும்பத்தில் அமைதி குலையலாம். சடலங்களை புதைக்கும்போது கூட வடக்கில் தான் வைப்பார்களாம். அதனால் வடக்கில் மட்டும் தலை வைக்கவேண்டாம்.
தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் தலை வைக்கலாம். அதிலும் கிழக்கு ரொம்பவும் நல்ல திசை.
தெற்கு
தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டி தூங்கலாம். வடக்கில் தலை வைக்கக் கூடாதே தவிர கால் வைக்கலாம். புகழை அடையவும், செல்வம் பெறவும் இந்த திசையில் தலைவைக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமும் நிம்மதியும் கிடைக்கும்.
கிழக்கு
இந்தத் திசையில் தலை வைக்கும்போது நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறதாம். இப்படி தொடர்ந்து தூங்குவதால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். குழந்தைகள், இளைஞர்கள் இந்த திசையில் கல்வி கற்றால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக நினைவாற்றல் அதிகமாகும்.
மேற்கு
மேற்கில் தலை வைத்து படுப்பது பல நல்ல பலன்களைத் தரும். வாழ்வின் புதுமையான மாற்றங்களை உண்டாக்கும். இப்படி தூங்கும் நபர்கள் பணக்காரர்களாகும் வாய்ப்பு அதிகம்.
இனிமேல் மேற்கண்ட திசைகளில் தலைவைத்து படுத்து வாழ்வில் பல நல்ல பலன்களை அனுபவியுங்கள்.