Tuesday, May 30, 2023
HomeSpiritual‘சிவபூஜையில் கரடி பூந்த மாதிரி..’ உண்மையிலே இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

‘சிவபூஜையில் கரடி பூந்த மாதிரி..’ உண்மையிலே இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

Siva Poojayil Karadi Meaning: நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த பல பழமொழிகளுக்கு நமக்கு அர்த்தமே நமக்கு தெரியாது. ஆனாலும், நடக்கும் சூழலுக்கு ஏற்ப நாம் அந்த பழமொழிகளை பயன்படுத்தும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. அதேபோல, முக்கியமான வேலையில் நாம் ஈடுபடும்போது ஏதேனும் இடையூறை யாராவது ஏற்படுத்தினால் சிவபூஜையில கரடி பூந்த மாதிரினு நாம் கூறுவோம்.

மங்கள வாத்தியம்

சிலர் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது அந்த பூஜையில் கரடி புகுந்துவிட்டதைத்தான் அப்படி கூறுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அது இல்லை. அப்படியானால், உண்மையில் சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி என்றால் என்ன என்பதை கீழே பார்ப்போமா?

கரடி என்பது கரடிகை ஆகும். இந்த கரடிகையை முற்காலத்தில் ஓசை கிளப்பும் வாத்தியமாக பயன்படுத்தினர். அதாவது சிவ பூஜையில் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்று.

கரடி ஓசை

அக்காலத்தில் மன்னன் சிவ பூஜை செய்யும்போது ஏதேனும் தடங்கலோ, இடையூறோ ஏற்படாமல் இருக்க இந்த கரடி வாத்தியத்தை வாசிக்க செய்வார்கள். இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். இதுவே காலப்போக்கில் பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

அதுமட்டுமல்லாமல் இவை கரடி கத்துவது போல் ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதாலே இதற்கு கரடிகை என்று பெயர் வந்தது. இன்று கரடிகை வாத்தியம் பயன்பாட்டில் குறைந்துவிட்டது. சிவபூஜையின்போது ஏராளமான வாத்தியங்கள் பயன்படுத்துவது இயல்பு.

இந்த நிலையில், சிவனுக்கு மிக உகந்த நாளாகிய மகா சிவராத்திரி வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.