மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் தனித்துவமானது. அவரது 10 அவதாரங்களிலே ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ராமபிரான் இந்த பூமியில் அவதரித்த நாளே ராம நவமி என்று கூறுகின்றோம்.
தசரதனின் புதல்வன்
அயோத்தியை ஆண்ட மன்னர் தசரத சக்கரவர்த்தி ஆவார். இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
தசரத சக்கரவர்த்தி தனது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டார். தசரத சக்கவர்த்திக்கு முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் புத்ர காமேஷ்டி யாகத்தை நடத்த முடிவு செய்தார்.
கோசலையின் மகன்
யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அந்த குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.
தசரதனின் மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள். அதன் பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தார். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.
அதன்பின்பு. ராமபிரான் சீதாவை மணமுடித்து வனவாசத்திற்கு சென்று இலங்கையை ஆண்ட ராவணனை வீழ்த்திய கதை நாம் அறிந்ததே ஆகும்.
ALSO READ | சனிக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் வாங்காதீங்க..! இதுதான் காரணம்..!