Panguni Uthiram: பங்குனி உத்திரம் சிறப்பாக ஆலயங்களில் வழிபாடுகளுடன் பக்தர்களின் கரகோஷங்களுடன் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றது.
மக்களுக்கு அருள்கள் பல பரியும் தெய்வங்களுக்கு திருமணம் நடைபெற்றதே இந்த பங்குனி உத்திர நன்னாளில் ஆகும். அதனால் பங்குனி உத்திர நன்னாளில் ஆலயம் சென்று வழிபட்டவர்களுக்கு வந்து சேரும் பலனை கீழே காணுங்கள்.
பலன்கள் :
- பங்குனி உத்திர நன்னாளில் உங்களால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
- பங்குனி உத்திரத்தில் ஆலய தரிசனம் மேற்கொண்டவர்களுக்கு திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்ததால், விரைவில் திருமண யோகம் கூடிவரும்.
- இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களில் பங்கேற்றதன் மூலம் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- பங்குனி உத்திர விரதம் இருந்ததன் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
- பங்குனி உத்திரத்தில் ஆலய வழிபாடு செய்த குழந்தைகள் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் மாற முடியும்.
- பங்குனி உத்திர வழிபாடு மூலம் உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைக்கும்.
- சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையும், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.
மேற்கண்ட பலன்கள் கண்டிப்பாக உங்களுக்கு பங்குனி உத்திர வழிபாடு மூலம் கிடைக்கும்.
ALSO READ | ஜெயிச்சுட்ட மாறா..! விடுதலை எனும் முழக்கத்தால் வெற்றி பெற்ற வெற்றிமாறன்..!