Thursday, May 25, 2023
HomeSpiritualமாசிமக நாளில் குலதெய்வத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

மாசிமக நாளில் குலதெய்வத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

மகாசிவராத்திரிக்கு பிறகு மிகவும் புனிதமான நாளாக வருவது மாசிமகம்(Masi Magam). மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே மாசிமகம் ஆகும். முருகன், சிவன், விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த இந்த நாளில் புனித தீர்த்த தலங்களில் நீராடி கோயில்களில் வழிபாடு செய்வது மிகவும் புண்ணியம் ஆகும்.

மாசி மாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதம். எனவே, இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

மாசிமகம்:

மாசிமக நாளில் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி விஷ்ணுவை வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.
தமிழ்நாட்டின் கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.

ALSO READ | பக்தர்களே.. மாசி மகம் என்றால் என்ன..? அப்படி என்னதான் சிறப்பு..?

குலதெய்வ வழிபாடு:

மாசி மக நாளில் சிவபெருமான், முருகப்பெருமான், விஷ்ணு பெருமான் ஆலயம் மட்டுமின்றி குலதெய்வ ஆலயங்களிலும் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும் என்பது ஐதீகம்.

  • மாசி மாத மகம் நட்சத்திரம் மற்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் இல்லத்தை சுத்தமாக்கி விளக்கேற்றி, மாவிளக்கிட்டு, படையலிட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
  • அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று சிவனையும், பெருமாளையும் மனதார வழிபட்டால் பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும்.
  • விரதம் இருந்து குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.

நாளை வரும் மாசிமக நன்னாளில் சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதுடன் குலதெய்வ ஆலயத்திற்கும் சென்று வழிபாடு நடத்தினால் புண்ணியமும், நன்மைகளும் கிடைக்கும்.

ALSO READ | சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த மாசிமகம்…! விரதம் இருப்பது எப்படி?