Monday, May 22, 2023
HomeSpiritualசிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த மாசிமகம்…! விரதம் இருப்பது எப்படி?

சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த மாசிமகம்…! விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தையே மாசிமகம் என்று நாம் அழைக்கிறோம். இந்த மாசி மகமானது முப்பெரும் கடவுள்களான சிவபெருமான், மகாவிஷ்ணு, முகருப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.
இந்த நாளில் விரதமிருந்து ஆலய வழிபாடு மேற்கொண்டால் மிகவும் புண்ணியம் ஆகும். மேலும், நாம் வேண்டியதும் நிறைவேறும்.

விரதம் இருப்பது எப்படி?

  • மாசி மகத்தில் விரதமிருப்பவர்கள் காலையில் எழுந்து ஆறு, கடல், குளம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
  • பிறகு உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவபெருமான், விஷ்ணு, முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
  • சிவபெருமான் ஆலயத்திற்கு செல்வோர்கள் தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
  • முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டுவிட்டு இரவு பால், பழத்தை சாப்பிடலாம்.
  • அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகள் செய்தாலும் இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.
  • மாசி மகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாசி மக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

பல புண்ணிய பலன்களை கொண்டு மாசிமகத்தில் ஆலய வழிபாடு மேற்கொண்டு சந்தோஷம் பெற்று மகிழுங்கள்.

ALSO READ | ஓம் நமசிவாய..! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 லிங்கங்கள் என்னென்ன?