உலகிற்கே ஆதியாக போற்றப்படும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. நடப்பாணடிற்கான சிவராத்திரி வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
அறிந்து கொள்ள வேண்டியது:
- சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
- சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.
- சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும்.
- நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.
- ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.
- சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும்.
- பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும்.
- இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.
வழிபாட்டு முறைகள்:
மகா சிவராத்திரியன்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும். லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும். நைவேத்தியம் கொடுத்தல் நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறும் என்பதையும் குறிக்கும்.
தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும். வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
ALSO READ | ஓம் நமசிவாய..! சிவராத்திரியில் செய்யக்கூடியது என்ன..? செய்யக்கூடாதது என்ன?