Monday, May 29, 2023
HomeSpiritualஓம் நமசிவாய..! சிவராத்திரியில் செய்யக்கூடியது என்ன..? செய்யக்கூடாதது என்ன?

ஓம் நமசிவாய..! சிவராத்திரியில் செய்யக்கூடியது என்ன..? செய்யக்கூடாதது என்ன?

உலகின் ஆதியான சிவபெருமானுக்கு உகந்த நாளான மாசி மகா சிவராத்திரி வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் எத்தனையோ சிவராத்திரிகள் வந்தாலும் சிவபெருமானுக்கு உகந்த மாசி மகா சிவராத்திரி பல பயன்களை அளிக்கும் வல்லமை கொண்டவை ஆகும்.

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். இந்நாளின் மூன்றாம் ஜாமக் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டு விலகிப் போகும் என்பது ஐதீகம்.

சிவனுக்குரிய நாளான மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், அப்பேற்பட்ட மகா சிவராத்திரியில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ALSO READ | சிவராத்திரி மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு..? விரதம் இருப்பது எப்படி?

செய்ய வேண்டியவை :

  •  மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை நினைத்து, சுக போகங்களை தவிர்த்து ஒருவேளை மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு காலையில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்துவிட்டு, சிவாலயங்கள் சென்று வழிபட வேண்டும்.
  • வீட்டில் சிவ பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, தேவையான பொருட்கள், மாலை, தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
  •  நண்பகலில் நீராடி விட்டு, உச்சிகால பூஜைகளை செய்ய வேண்டும்.
  • மாலை நேரத்தில் மீண்டும் குளித்துவிட்டு சிவலிங்கத்தை பூஜை செய்ய வேண்டும்.
  • நான்கு கால சிவ பூஜையில், பூஜைக்கு தேவையான வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியம் வைத்து படைத்து பூஜை செய்ய வேண்டும்.
  •  சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம். சிவாலயங்களில் நடைபெறும் பூஜைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்ய வேண்டும்.
  • வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை படிக்கலாம். இல்லையேல் அடுத்தவரை படிக்க சொல்லி கேட்கலாம்.

செய்யக்கூடாதவை :

  • சிவராத்திரியன்று பகலில் தூங்கக்கூடாது.
  • சிவராத்திரியன்று கண்விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.