Saturday, May 27, 2023
HomeSpiritualசனிக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் வாங்காதீங்க..! இதுதான் காரணம்..!

சனிக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் வாங்காதீங்க..! இதுதான் காரணம்..!

நம் வீடுகளிலும், கிராமப்புறங்களிலும் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொன்று செய்யக்கூடாது என்று கூறியிருப்பார்கள். சில விஷயங்கள் நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் சில விஷயங்களுக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கும். ஜோதிட ரீதியில் கிரகங்களிலே மிகவும் முக்கியமானவர் சனிபகவான், சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்து அவர் வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் மாற்றம் பெறும்.

சனிக்கிழமை தினத்தில் சில பொருட்களை வாங்கக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாமா?

வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன?

  • சனிக்கிழமையன்று உப்பு வாங்கவே கூடாது..அவ்வாறு வாங்கினால் வியாபாரத்தில் நஷ்டம், பண விரயம் உண்டாகும். அடிக்கடி நோய்வாய்படவும் நேரிடும்.
  • வீடு பெருக்கப் பயன்படும் துடைப்பத்தை சனிக்கிழமை வாங்குவது நல்லதல்ல.
  • கத்தரிக்கோலை சனிக்கிழமையன்று வாங்குவது நல்லதல்ல. இதனால் மோசமான சூழ்நிலையில் இருப்பவர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
  • எள்ளை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. இதனால் முடிக்க வேண்டிய காரியம் முடியாமல் தள்ளிப் போகும் அல்லது தடைபடும்.
  • இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை வாங்கக்கூடாது. ஏனென்றால் இரும்பு பொருட்கள் சனி பகவானுக்கு ஆகாததால் அன்று வாங்கினால் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
  • இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையன்று தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.
  • சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாகும். ஆனால் எண்ணெயை தானமாக கொடுக்கலாம்.
    மேலே கூறியவற்றில் சில விஷயங்களை நாம் தவிர்க்க முடியாத காரணத்தால் வாங்கினாலும், பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.

ALSO READ |மாங்கல்ய பலம், ஆயுள் வலிமை தரும் சந்திர தரிசனம்..! எப்படி வணங்குவது?