Tuesday, May 23, 2023
HomeSpiritualநிம்மதி தரும் தீப வழிபாடு..! எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள்?

நிம்மதி தரும் தீப வழிபாடு..! எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள்?

இந்து மத முறைப்படி இறை வழிபாடு என்பது தீபம் ஏற்றப்படாமல் முழுமை பெறாது. இறை வழிபாட்டின்போது நாம் தீபம் ஏற்றுவதற்கு 5 எண்ணெய்களையே பயன்படுத்த வேண்டும்.

  •  நல்லெண்ணெய்
  •  இலுப்பெண்ணெய்
  • வேப்பெண்ணெய்
  •  விளக்கெண்ணெய்
  •  நெய்

அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதற்கு மேற்கண்ட எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

  •  நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம் காரிய சித்தி கிடைக்கும்.
  • இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் வீட்டில் குலதெய்வ கடாட்சம் கிடைக்கும்.
  • வேப்பெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை நீங்கும். நமக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் அகலும்.
  • விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் வீட்டில் நோய்நொடி அண்டாது. சிலருக்கு இரவில் தூக்கம் சரியாக வராது. சுறுசுறுப்பாக செயல்பட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த விளக்கெண்ணெய் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும்.எந்த விஷயம் மிக மிக அவசியமாக தேவையோ, அந்த விஷயத்திற்கு குறிப்பிட்ட அந்த எண்ணெயை ஊற்றி ஒரு மண் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

ஐந்து விஷயங்களும் தேவை என்றால், ஐந்து எண்ணெயை ஊற்றி தீபமேற்றி பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவனை வழிபாடு செய்து வர உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ஐந்து எண்ணெய்களை ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

ALSO READ | ஆஞ்சநேயர் வழிபாடு..! எந்த கிழமையில் வணங்கினால் என்னென்ன பலன்கள்..?